வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தை அமாவாசை அன்று இதை மட்டும் செய்ய தவறாதீர்கள்!

Updated On: January 12, 2026 4:03 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

தை அமாவாசை அன்று இந்த தவறை மற்றும் செய்யாதீர்கள் 

இன்றைய பதிவில் தை அமாவாசை அன்று செய்ய கூடாதவை என்பதை பற்றி பார்க்க போகிறோம். எல்லா அம்மாவாசையையும்விட தை அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அமாவாசையில் நாம் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அந்த வருடம் நமக்கு இன்பமாக அமையும் என்பது ஐதீகம் ஆகும். நமக்கு வரும் அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து நமது முன்னோர்கள் நம்மை காப்பாற்றுவார்கள். சும்மாவா சொன்னார்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று.

நாம் ஆண்டுதோறும் தை அமாவாசை வழிபாடு செய்து வந்தால், வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடையின்றி நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. தை அமாவாசையை முறையாக வழிப்பட வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் தை அமாவாசை பற்றி பார்க்க போகிறோம்.

தை அமாவாசை :

தை மாதத்தில், மகர ராசியில் சூரியன் பகவானோடு சேரும் இந்த நாளே தை அமாவாசை ஆகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதனால் வாழ்வில் பல நன்மைகளை நாம் பெறலாம்.

ஆடி அமாவாசை நாளில் பித்துருலோகத்தில் இருந்து வரும் நம் முன்னோர்கள், 6 மாத காலம் பூமியில் இருந்து நம்மை ஆசிர்வதித்த பின், தை அமாவாசை அன்று நம்முடைய மனப்பூர்வமான வழிபாட்டை ஏற்று கொண்டு முழுமனதோடு நம்மை ஆசிர்வதித்து பித்துருலோகம் செல்கின்றனர்.

தை அமாவாசை என்பது புனிதமான உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆகும். எனவே, முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு சடங்குகளை செய்வதற்கு  இது இன்னும் மங்களகரமானதாக இருக்கும். 

இந்த திதி செய்யத் தவறினால், நமக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், பித்ரு தோஷத்தின் வேராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இது பெரும்பாலும் பித்ரு சாபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இறந்தவர்களுடன் பரிகாரம் செய்வதற்கும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் சடங்குகளை நடத்த மக்கள் இந்த குறிப்பிட்ட நாளான தை அமாவாசையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அமாவாசை நாளில், பிதுர் லோகத்தை விட்டு வெளியேறும் பித்ருக்கள், தங்கள் சந்ததியினரை ஆசிர்வதித்து பின்பு பூலோகம் திரும்புகின்றனர். இந்நாளில் நமது பித்ருக்களுக்கு உரிய முறையில் வழிபாடு செய்து, சிறுசிறு பிரசாதம் வழங்கி மகிழ்ந்தால் பெரும் பலன்கள் உண்டாகும்.

தை அமாவாசை வழிபடும் முறை 2026.! | Thai Amavasai Valipadu in Tamil

தை அமாவாசை அன்று இந்த ஐந்தை மட்டும் செய்யாதீர்கள்:

அமாவாசை அன்று வாசலில் கோலம் போட கூடாது. அசைவம் சாப்பிட கூடாது. மேலும் சுரைக்காய்,பாகற்காய் போன்றவை சாப்பிட கூடாது. யாரிடமும் தானம்  வாங்க கூடாது. அமாவாசை அன்று தீட்டு வீட்டுக்கு போக கூடாது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now