தை அமாவாசை வழிபடும் முறை 2024

Advertisement

தை அமாவாசையும் தை வெள்ளியும்!

தை அமாவாசை 2024: இந்த 2024-ல் தை அமாவாசையானது 09.02.2024 (வெள்ளிக்கிழமை) வருகின்றது. எல்லா அம்மாவாசையையும்விட தை அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அமாவாசையில் நாம் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அந்த வருடம் நமக்கு இன்பமாக அமையும் என்பது ஐதீகம் ஆகும். நமக்கு வரும் அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து நமது முன்னோர்கள் நம்மை காப்பாற்றுவார்கள். சும்மாவா சொன்னார்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று.

நாம் ஆண்டுதோறும் தை அமாவாசை வழிபாடு செய்து வந்தால், வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடையின்றி நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

தை அமாவாசை 2024

தை அமாவாசை புனித உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் சடங்குகளை மேற்கொள்வதற்கு இது மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.

இந்த திதி செய்யத் தவறினால், நமக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், பித்ரு தோஷத்தின் வேராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இது பெரும்பாலும் பித்ரு சாபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இறந்தவர்களுடன் பரிகாரம் செய்வதற்கும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் சடங்குகளை நடத்த மக்கள் இந்த குறிப்பிட்ட நாளான தை அமாவாசையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அமாவாசை நாளில், பிதுர் லோகத்தை விட்டு வெளியேறும் பித்ருக்கள், தங்கள் சந்ததியினரை ஆசிர்வதித்து பின்பு பூலோகம் திரும்புகின்றனர். இந்நாளில் நமது பித்ருக்களுக்கு உரிய முறையில் வழிபாடு செய்து, சிறுசிறு பிரசாதம் வழங்கி மகிழ்ந்தால் பெரும் பலன்கள் உண்டாகும்.

தை அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்..!

Thai Amavasai Date 2024 | தை அமாவாசை தேதி 2024

  • தை அமாவாசை ஆரம்பிக்கும் நாள்: 09.02.2024
  • தை அமாவாசை முடியும் நாள்: 10.02.2024

Thai Amavasai 2024 Time | தை அமாவாசை நேரம் 2024

  • தை அமாவாசை ஆரம்பிக்கும் நேரம்: 08.02 AM 
  • தை அமாவாசை முடியும் நேரம்: 04.28 AM 

தை அமாவாசை வழிபாடும் முறை

Thai Amavasai 2024

வருகின்ற தை அமாவாசை அன்று  திதி, தர்ப்பணம், படையல், ஆலய வழிபாடு, தீர்த்தமாடுதல் போன்ற சடங்குகளை தொடர்ந்து பின்பற்றுகின்றனர். பித்ருக்களின்  வழிபாட்டை அதாவது திதி கொடுப்பதை ‘அபரான்ன காலம்‘ எனப்படும் பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலங்களில் செய்ய வேண்டும். இந்த நேரம் தான் நம்முடைய முன்னோர்கள் பூலோகம் வரும் நேரமாகும். அதுமட்டுமின்றி ‘குதப காலம்‘ என அழைக்கப்படும் நண்பகல் 11:36 முதல் 12:36 மணி வழிபட்டாலும் அது நமக்கு ஏற்ற பலனை தரும் என்று நம்பப்படுகின்றது.

தை அமாவாசை அன்று திதி கொடுக்கப்போகும் தியோர், கர்ப்பிணிகள், சிறியோர், உடல்நலம் குன்றியோர் முழு விரதம் இருக்கத் தேவையில்லை. இதனால் நமக்கு எந்த தோஷமும் ஏற்படாது.

இத்தகைய சடங்குகள் அதாவது  அமாவாசை திதி புனிதமான இடங்கள், யாத்திரை மையங்கள், கரையோரம் அல்லது போற்றப்படும் நதிகள் அல்லது நீர்நிலைகளில் நடைபெறும் போது அவை புனிதமானதாகக் கருதப்படுகின்றன.

இதன் விளைவாக, ஏராளமான மக்கள் ஹரித்வார், பிரயாக் திரிவேணி சங்கம் (அலகாபாத்), ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி போன்ற நன்கு அறியப்பட்ட நதி தொடர்ச்சிகளுக்குச் சென்று இறந்தவர்களின் ஆத்மாக்களை நினைவுகூரும் வகையில் ஏராளமான சடங்குகளைச் செய்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement