தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் !
தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் ! உங்க ராசி இருக்கானு பாருங்க இன்றைய பதிவில் தை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எந்தெந்த ராசிகள் என்று பார்க்க போகிறோம். பொதுவாக தை பிறந்தால் வலி பிறக்கும் என்பது பழமொழி. அதிர்ஷ்டங்கள் கொட்டும் இந்த தை மாதத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி உள்ளன. செவ்வாய் ஜனவரி 21 ஆம் தேதி கடகத்தில் இருந்து பின்னோக்கி மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோன்று சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதனால் சுக்கிரன் உச்ச பலம் அடைய உள்ளார். அதே நேரத்தில் செவ்வாய் வக்கிர நிலைக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே குரு வக்கிர நிலையில் உள்ளார். இந்நிலையில் குரு வக்கிர நிவர்த்தியும்.இந்த மாத இறுதியில் உள்ளது. ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் இருப்பார்கள். ராகு தோஷத்தை உருவாக்கினாலும் குரு அதை கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் இந்த காலத்தில் அரசு பணியில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் நரம்பு சார்ந்த பிரச்சனைகள் வரமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தெரிந்தவர்கள், உறவினர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். பயணம் செய்யும்போது காவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பதற்ற நிலை குறைந்தாலும், அலைச்சல் இருக்கதான் செய்யும். பணம் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கன்னி:
கன்னி ராசி பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி, தொழில் ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். சுய தொழில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. துணையிடம் அதிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் வளர்ச்சியை காண்பீர்கள். குடும்ப விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரத்தில் வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி பொங்கலுக்குள் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசி
மகரம்:
மகர ராசிக்காரர்கள் கண் மற்றும் நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரியுடன் பகைத்துக்கொள்ள வேண்டியதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுடனான உறவில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தொழிலில் இருக்கும் சக கூட்டாளிகளுடன் மோதல் ஏற்பட கூடும்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்கள் வாழ்க்கை துணை மற்றும் ரத்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பூர்விக சொத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் முன்னதாகவே கவனமாக முடிவெடுக்க வேண்டும். எதிரிகளை குறைத்து மதிப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மனக்கவலையால் தூக்கம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |









