தைப்பூசம் 11 நாள் விரதம் எப்படி இருக்க வேண்டும்.? எப்போது தொடங்க வேண்டும்.?

Advertisement

தைப்பூசம் 11 நாள் விரதம் இருக்கும் முறை மற்றும் தேதி 2025

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகருக்கு தைப்பூசம் 11 நாள் விரதம் எப்படி இருக்க வேண்டும்.? எப்போது விரதம் இருக்க தொடங்க வேண்டும்.? உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு கொண்டப்படும் விழாக்களில் ஒன்று தான் தைப்பூசம். தைப்பூசத்திற்கு முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய வரத்தினை அருளுவார்.

ஆகையால், முருக பக்தர்கள் அனைவரும் முருக பக்தருக்கு இக்காலத்தில் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் விரதம் மட்டும் இருந்து வழிபடுவார்கள். அப்படி விரதம் இருந்து வழிபடுபவர்கள் 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள்  21 நாட்கள் விரதம் இருப்பார்கள். 21 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 11 நாள் விரதம் இருப்பார்கள். அப்படி நீங்கள் 11 நாள் தைப்பூசம் விரதம் இருக்க போகிறீர்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக படித்து விரதம் எப்படி இருக்க வேண்டும்.? எந்த தேதி விரதம் தொடங்க வேண்டும்.? எந்த தேதியில் முடிக்க வேண்டும்.? உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Thaipusam 11 Naal Viratham Murai:

தைப்பூசம் 11 நாள் விரதம் இருக்கும் முறை மற்றும் தேதி 2025

தைப்பூசம் 11 நாள் விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 01 ஆம் தேதி விரதத்தினை தொடங்கலாம். பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசம் வருவதால் பிப்ரவரி 01 ஆம் தேதி விரதத்தினை தொடங்கினால் 11 நாள் சரியாக இருக்கும்.

மேலும், 11 நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் 6 நாட்கள் விரதம் இருக்கலாம். அப்படி 6 நாட்கள் விரதம் இருக்க நினைப்பவர்கள் பிப்ரவரி 06 ஆம் தேதி தொடங்கினால் சரியாக இருக்கும்.

அதேபோல், 3 நாட்கள் தைப்பூசம் விரதம் இருக்க நினைப்பவர்கள் பிப்ரவரி 09 ஆம் தேதி விரதம் இருக்க தொடங்கலாம். இதனையும் தவிர்த்து ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க நினைப்பவர்கள் தைப்பூசம் நாளான பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று மட்டும் விரதம் இருக்கலாம்.

11 நாள் விரதம் இருக்கும் முறை:

11 நாள் விரதம் இருக்கும் முறை

  • தைப்பூசம் 11 நாள் விரதத்தினை பிப்ரவரி 01 ஆம் தேதி தொடங்குங்கள்.
  • முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள பொருட்களை எல்லாம் துடைத்து பொட்டு வைத்து பூஜைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
  • பிப்ரவரி 01 ஆம் தேதி அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு, பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானுக்கு பூ பொட்டு வைத்து விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து வழிப்படுங்கள்.
  • அதன் பிறகு, முருகனுக்கு உகந்த மந்திரங்களை உச்சரியுங்கள். உங்களால் முடிந்தவரை ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை எழுதுங்கள்.
  • அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிப்படுங்கள்.
  • ஏதேனும் ஒரு வேளை பட்டினி இருந்து விரதத்தினை கடைபிடிக்கலாம். முடியாதவர்கள் மூன்று வேளையும் உணவு உட்கொண்டு விரதத்தினை கடைபிடிக்கலாம்.
  • உங்களின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உணவினை எடுத்துக்கொண்டு விரதத்தினை கடைபிடியுங்கள்.
  • முக்கியமாக அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதை தவிர்த்து விடுங்கள்.
  • தீய சொற்களை பேசாதீர்கள். அடுத்தவர்களிடம் கோபம் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் செய்யாதீர்கள்.
  • காலை மாலை என இருவேளையும் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். வீட்டிலும் காலை மாலை என இருவேளையும் விளக்கேற்றி மந்திரங்களை உச்சரியுங்கள்.
  • இதேபோல், தினமும் வழிபாடு தைப்பூசம் நாளான பிப்ரவரி 11 ஆம் தேதி மாலையில் முருகனுக்கு பிடித்த உணவுகளை நெய்வேத்தியமாக படைத்து, முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விரதத்தினை நிறைவு செய்த்த்து கொள்ளலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement