Thaipusam Tamil Date 2025 in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தைப்பூசம் 2025 ஆம் ஆண்டு எப்போது வருகிறது என்பதை கொடுத்துள்ளோம். தைப்பூசம் என்பது தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா ஆகும். தமிழ் மாத பஞ்சாகத்தின்படி, பத்தாவது மாதமான தை மாதம் கொண்டாடப்படும் விழா ஆகும். தைப்பூசம் கேரளாவில் தைப்பூயம் என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கு ஒரு வரலாற்று காரணம் உள்ளது.
முருக பெருமான், தனக்கு கிடைக்க வேண்டிய ஞானப்பழம் கிடைக்காமல் போனதால் கோபித்துக்கொண்டு கயிலாயத்தில் இருந்து சிவன், பார்வதி, விநாயகர் மீது வெறுப்புற்று பண்டார கோலத்தில் முருக பெருமான் பழநி மலையில் குடியேறிய நாளையே தை பூசம் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும், திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படும். எனவே, இந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு, தைப்பூசம் எப்போது வருகிறது.? தைப்பூசம் வழிபாடு செய்ய நல்ல நேரம் எப்போது.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி
Thaipusam 2025 Date and Time in Tamil Nadu:
- முருக பெருமானுக்கு இருக்க கூடிய சக்திவாய்ந்த விரதங்களில் தைப்பூசம் விரதமும் ஒன்றாக கருதப்டுகிறது. தை மாதத்தில் பவுர்ணமியும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு 2025 தைப்பூசமானது, பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. பூசம் நட்சத்திரம் தொடங்கும் நேரம் – பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று மாலை 06:01 PM மணிக்கு தொடங்குகிறது. பூசம் நட்சத்திரம் முடிவடையும் நேரம் – பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று மாலை 06:34 PM மணிக்கு முடிவடைகிறது.
- எனவே பூச நட்சத்திரம் தொடங்கி முடிவடையும் நேரத்திற்குள் தைப்பூச வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
தைப்பூசத்தன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனை வழிபாடு செய்ய வேண்டும். முருகன் கோவிலில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தைப்பூச நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
தைப்பூசம் அன்று முருக பெருமானை வேண்டி விரதம் இருந்து, காவடி எடுத்தல், அலகு குத்துதல், பரவ காவடி, பால் காவடி என பல்வேறு விதமான காவடிகளும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும். முருக பெருமானுக்கு எடுக்கப்படும் சக்திவாய்ந்த காவடிகள் பின்வருமாறு:
- மயில் காவடி
- சந்தன காவடி
- சர்ப காவடி
- சேவற் காவடி
- அன்னக் காவடி
- வேல் காவடி
- பால் காவடி
- வாள் காவடி
- விளக்கு காவடி
ஒவ்வொருவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான காவடிகள் எடுக்கப்டுகிறது. மேலும், அலகு குத்துதல் நடைபெறும். நாக்கு, கன்னம், கை மற்றும் உடம்பின் பிற பகுதிகளில் வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல்.
தைப்பூசம் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |