Thaipusam 21 Days Viratham in Tamil | தைப்பூசம் 21 நாள் விரதம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தைப்பூசம் 48 நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் 48 என்ற எண்ணிற்கு அடுத்தபடியாக இருக்கும் 21 நாள் இருக்கலாம். எனவே, இப்பதிவில் தைப்பூசம் 21 நாள் விரதம் எப்போது தொடங்க வேண்டும். எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முருகருக்கு 21 நாட்கள் தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆண்டு 2025 தைப்பூசம் பிப்ரவரி 11 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. தைப்பூசத்திற்கு 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். ஆனால், 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். எனவே, தைப்பூச 21 நாள் விரதம் எப்போது தொடங்க வேண்டும்.? 21 நாட்களும் எப்படி விரதம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Thaipusam 21 Days Viratham Start Date:
தைப்பூசத்திற்கு 21 நாட்கள் விரதம் இருக்க நினைப்பவர்கள், ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று விரதத்தை தொடங்கலாம். பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை வரை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மறுநாள் செவ்வாய்க்கிழமை 11.02.2025 அன்று தைப்பூசம். எனவே, தைப்பூச 21 நாள் விரதத்தினை ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கினால் சரியாக இருக்கும்.தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை கூறினால் கேட்ட வரன் கிடைக்கும்…
Thaipusam 21 Days Fasting in Tamil | தைப்பூசம் 21 நாள் விரதம் இருக்கும் முறை:
வழிபாட்டு முறைகள்:
விரதம் இருப்பவர்கள் காலை மாலை என இருவேளையும் குளித்துவிட்டு, காலையிலும் மாலையிலும் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். முருகன் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி, அரளி அல்லது மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து வழிப்படுவது சிறந்தது.
முருகனுக்கு நெய்வேத்தியமாக காய்ச்சிய பால் தேன் கலந்து வைத்து வழிபடலாம். அந்த பாலை பிறகு நாம் அருந்தலாம்.
முருகர் படம் முன் அமர்ந்து, முருகன் மந்திரங்களையும் கூறி, என்ன தேவைக்காக விரதம் இருக்கிறீர்களோ அதனை சொல்லி வேண்டி கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு அருகே உள்ள முருகன் கோவிலுக்கு காலை மாலை இரண்டு வேளையும் சென்று விளக்கு ஏற்றி பூக்கள் சாற்றி, முருகனுக்கு உரிய மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும்.
உணவு முறைகள்:
விரதம் இருப்பவர்கள் ஏதேனும் ஒருவேளை பட்டினியாக இருந்து விரதத்தை கடைபிடிக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மூன்று வேளையும் உணவு உட்கொள்ளலாம். முற்றிலும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மூன்று வேலை உணவு உட்கொள்பவர்கள் வயிறு முட்ட சாப்பிடாமல் அறைவயிற்றுக்கு சாப்பிட வேண்டும்.
விரதம் நிறைவு செய்யும் முறை:
விரதத்தின் நிறைவு நாள் அன்று முருகனுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம். கோவிலுக்கு சென்று முருகனை வழிபாடு செய்து விரதத்தினை நிறைவு செய்து கொள்ளலாம்.
இந்த 21 நாட்களும் முருகனை மனதார நினைத்து விரதத்திற்கு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் முழு மனதோடு மேற்கொண்டிறீர்கள் என்றால் நீங்கள் வேண்டியதை முருகப்பெருமான் அருளுவார்.
ஓம் சரவணபவ..
தைப்பூசம் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |