தைப்பூசம் 48 நாள் விரதம் | Thaipusam 48 Days Viratham Irupathu Eppadi
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகனுக்கு தைப்பூசம் 48 நாட்கள் எப்படி விரதம் இருப்பது எப்படி.? என்பதை கொடுத்துள்ளோம். பொதுவாக தமிழ்கடவுளான முருகப்பெருமானுக்கு சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், செவ்வாய்கிழமை விரதம், தைப்பூசம் விரதம் போன்றவை உகந்த விரதமாக இருக்கிறது. இவற்றில் தைப்பூசம் விரதம் 48 நாட்கள் இருப்பார்கள். நினைத்தது நடக்க முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
எனவே, முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும்போது நாம் சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்படி முருகப்பெருமானுக்கு விரதம் இருக்க நினைக்கும் பலருக்கு 48 நாட்கள் எப்படி விரதம் இருப்பது என்று தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்க எப்போதிலிருந்து தொடங்க வேண்டும்.? 48 நாட்களும் எந்த விதமான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.? 48 நாட்களும் முருகனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்.? உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
முருகனுக்கு தைப்பூசம் 48 நாள் விரதம் இருக்கும் முறை:
முருகனுக்கு தைப்பூசம் 48 நாள் விரதம் எப்போது தொடங்க வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். 👇
தைப்பூசம் 48 நாட்கள் விரதம் இருப்பதற்கு எந்த நாளில் இருந்து தொடங்க வேண்டும்.?
விரதம் எப்படி தொடங்க வேண்டும்.?
- விரதம் இருக்க தொடங்கும் முதல் நாள், அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பிரம்மமுகூர்தத்தில் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி உங்கள் வேண்டுதல் எதுவோ அதனை முருகனிடம் கூறி வழிபாடு செய்ய வேண்டும். முருகனுக்கு உகந்த மஞ்சள் அல்லது சிகப்பு நிற பூக்கள் கொண்டு அலங்கரித்து, பாலில் தேன் கலந்து தெய்வேத்தியம் படைக்க வேண்டும்.
- அதேபோல், அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
- 48 நாட்களும் காலை மாலை என இருவேளையும் முருகனுக்கு உகந்த பதிகங்களை பாராயணம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் எப்போது கஷ்டம் இருந்துகொண்டே இருக்கிறது என்று கூறுபவர்களும், வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொல்பவர்களும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
- நோய் நொடியுமாய் இருப்பவர்கள் நோய் குணமாக சண்மூக கவசம் படிக்கலாம். குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் திருப்புகழ் பாராயணம் செய்யலாம்.
ஷட்கோண தீபம்:
பூஜை அறையில் உள்ள முருகனின் திருவுருவப்படத்திற்கு முன் காலை மற்றும் மாலை என இருவேளையும் ஷட்கோண கோலமீட்டு ஷட்கோண தீபம் ஏற்றி, 108 முறை ‘ஓம் சரவண பவ’ எனும் முருகனின் மந்திரத்தை சொல்ல
48 நாட்களும் எந்த உணவுகளை உட்க்கொள்ளலாம்.?
- 48 நாட்களும் ஏதேனும் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.
- காலையில் விரதம் இருக்க நினைப்பவர்கள் முருகனுக்கு படைத்த நெய்வேத்தியத்தை சாப்பிட்டு விட்டு, விரதத்தினை தொடங்கலாம்.
- இரவு விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள் பால் அல்லது பழம் மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம்.
- உடல்நிலை சரியில்லாதவர்களும், ஒருவேளை உணவை தவிர்த்தால் எனக்கு மயக்கம் வரும் என்று கூறுபவர்கள்,மூன்று வேளையும் உணவை உட்கொள்ளலாம்.
கடைசி நாளில் விரதத்தினை எப்படி முடிக்க வேண்டும்.?
- கடைசி நாள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டு விரதத்தினை நிறைவு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் படைத்து விரதத்தினை நிறைவு செய்து கொள்ளலாம்.
- தங்களின் உடல் நிலைக்கு ஏற்ற விரதத்தினை தேர்வு செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் விரதத்தினை மேற்கொள்ள முடியும்.
தைப்பூசம் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மாதவிடாய் நேரத்தில் என்ன செய்வது.?
விரதம் இருக்கும் நாட்களில், மாதவிடாய் ஏற்பட்டால் விரதத்தை நிறுத்திவிட்டு மாதவிடாய் முடிந்த பின்னர் துவங்க வேண்டும். உதாரணத்திற்கு விரதம் தொடங்கிய 15 ஆம் நாள் மாதவிடாய் வந்துவிட்டால், மாதவிடாய் 4 நாட்கள் முடிந்த பிறகு, வரும் 5 ஆம் நாள் விரதத்தின் 16 வது நாளாக கணக்கில் கொள்ள வேண்டும்.
அப்படி இல்லையென்றால், மாதவிடாய் காலத்தில், உங்கள் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, அக்கா, தம்பி என யாரேனும் ஒருவரை பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி, நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய சொல்லி, நீங்கள் பூஜை அறைக்கு போகாமல், முருகனின் பதிகங்களை படித்து, விரதத்தினை மேற்கொள்ளலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |