தைப்பூசம் விரதம் மந்திரம்
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அதில் பெரும்பாலானவர்களுக்கு முருக பெருமான் பிடித்த கடவுளாக இருக்கிறார். அதுமட்டுமில்லமல் முழுமுதற் கடவுளாகவும் இருக்கிறார். இவருக்கு சஷ்டி விரதம் இருப்பார்கள் இந்த விரதம் இருப்பதன் மூலம் குழந்தை வரனை கொடுக்கிறார். மேலும் செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு உகந்த நாளாக இருக்கிறது.
இதுமட்டுமில்லாமல் தை மாதம் வந்தாலே பொங்கல் மட்டும் நினைவிற்கு வராது. முருகனும் நினைவிற்கு வந்து விடுவார். ஏனென்றால் தைப்பூசம் பண்டிகை வர கூடியது. இதில் முருகனுக்கு விரதம் இருந்தும், மாலையிட்டும் 48 நாட்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்த நாளில் எப்படி விரதம் இருக்க என்று தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
தைப்பூசம் பாடல் வரிகள்:
முருகனை மனதார நினைத்து வழிபட்டால் கேட்ட வரனை வழங்கிடுவார். “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்பார்கள். நீங்கள் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் அவரை நினைத்து மனமுருகி வேண்டினால் கேட்ட வரத்தை வழங்கிவிடுவார். முருகா என்ற வார்த்தையே நீங்கள் கூறினாலே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று கடவுளையும் வணகுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
நீங்கள் முருகா என்று மனமுருக வேண்டினாலே குழந்தை வரத்தையும், நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் விளங்குகிறார். நீங்கள் தைப்பூசம் விரதம் இருந்தால் என்னென்ன பாடலை உச்சரிக்க வேண்டும் என்று கீழே கூறப்பட்டுள்ளது. அதனை காண்போம் வாங்க.
கந்தசஷ்டி கவச பாடல்களை மனதார 16 முறை உச்சரித்தால் முருகபெருமான் நம்மை தேடி வருவார் என்பது பாம்பன் சுவாமிகள் அனுபவ ரீதியாக கண்டதாகும். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் ஆகியன முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் கூறலாம். இதன் மூலம் முருக பெருமானின் அருளை முழுமையாக பெறலாம், இதனால் கேட்ட வரன் கிடைக்கும்.
தைப்பூசம் அன்று மட்டுமில்லை தினமும் கந்த சஷ்டி பாடல் வரிகளை கேட்பதன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நன்மைகள் உண்டாகும்.
தைப்பூசம் அன்று விரதம் இருப்பது எப்படி
தைப்பூசம் விரதம் மந்திரங்கள்:
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே
மேல் கூறப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை என்று 48 நாட்கள் கூறி வந்தால் முருக பெருமான் கேட்ட வரத்தை கொடுப்பார் என்று அகத்தியர் கூறுகிறார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |