தைப்பூசம் அன்று முருகருக்கு படைக்க வேண்டிய பொருட்கள்.!

Advertisement

முருகனுக்கு உகந்த பிரசாதம் | Muruganukku Piditha Prasadam

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முருகருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள்/உணவுகள்/பிரசாதங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம் அனைவருக்கும் பிடித்த கடவுளான முருகப்பெருமானுக்கு அவருக்கு பிடித்த உணவுகளை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்தால் முருகர் மகிழ்ச்சி அடைவார். முருகருக்கு மாதம் மாதம் சஷ்டி விரதம் இருப்போம், கிருத்திகை விரதம் இருப்போம், செவ்வாக்கிழமை விரதம், தைப்பூசம் விரதம் இருப்போம்.

அப்படி முருகருக்கு விரதம் இருந்து வழிப்படும் நாட்களில், அவருக்கு பிடித்த உணவுகளை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். அதிலும், குறிப்பாக தைப்பூசத்திற்கு Muruganukku Piditha Prasadam படைப்பது மிகவும் அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் முருகருக்கு பிடித்த உணவுகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆகவே முருகருக்கு பிடித்த உணவுகளை படைத்து முருகனின் அருளை பெறுங்கள்.

தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை கூறினால் கேட்ட வரன் கிடைக்கும்…

முருக பெருமானுக்கு உகந்த பிரசாதங்கள்:

முருகனுக்கு உகந்த பிரசாதம்

  • சர்க்கரை பொங்கல்
  • திருபாகம்
  • பால் பாயசம்
  • கடலைப்பருப்பு பாயசம்
  • தேனும், தினைமாவும்
  • பஞ்சாமிர்தம்
  • கந்தரப்பம்

மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் முருகருக்கு உகந்த பிரசாதங்கள் ஆகும். இதில் உங்களுக்கு முடிந்த உணவுகளை சமைத்து முருகருக்கு நெய்வேத்தியமாக படைக்கலாம். அதிலும், குறிப்பாக முருகருக்கு தேனும், தினைமாவும், திருபாகம் மற்றும் கடலைப்பருப்பு பாயசம் மிகவும் ரொம்ப பிடிக்குமாம். ஆகையால், அதனை இவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக படைப்பது சிறப்பு. இந்த உணவுகளை எல்லாம் முருகருக்கு படைத்து வழிபாடு செய்தால் முருகப்பெருமான் மனம் மகிழ்வார்.

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

மேலும், அன்றைய தினம் முருகர் கோவிலுக்கு ஒரு சில அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. பால், தயிர், வாழைப்பழம், தேன், இளநீர், சந்தனம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.

மேலும், முருகனுக்கு கடம்ப மலர் மிகவும் பிடிக்கும். ஆகையால், முருகப்பெருமானை கடம்ப மலர் கொண்டு அலங்கரித்து வழிபாடு செய்வது இன்னும் சிறப்புக்குரியது ஆகும். முருகருக்கு வேகவைத்த அன்னத்தில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் மிகவும் பிடிக்குமாம். ஆகையால், முருகருக்கு உரிய நாட்களில் தயிர் சாதம் மற்றும் சாம்பார் சத்தம் படையல் இட்டு வழிபாடு  செய்யலாம்.

அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு முருக பெருமானுக்கு விளக்கேற்றி, முருகருக்கு உகந்த மந்திரங்களை படித்து முருகருக்கு பிடித்த உனவுகளை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும்.

முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி.?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement