தைப்பூசம் அன்று
தைப்பூசம் என்பதை முருக கடவுளை நினைத்து வழிபடும் நாளாகும். தைப்பூசம் அன்று கோவில்களில் பூஜைகள் பெரும் விமர்சையாக நடக்கும். அன்றைய தினம் பலரும் முருக பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள். உங்கள் வீட்டில் உள்ள ஆரோக்கிய பிரச்சனை, பண பிரச்சனை போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் தைப்பூசம் அன்று இந்த பதிவில் கூறியுள்ள மூன்று பொருட்களை மட்டும் வாங்கி வழிபடுங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி விடும்.
தைப்பூசம் அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:
தைப்பூசம் நாளை 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய நாள் முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் நீங்கள் நினைத்த வரத்தை அழிப்பார்.
கல் உப்பு:
உங்கள் வீட்டில் ஏற்கனவே கல் உப்பு இருந்தாலும் பரவாயில்லை, தைப்பூசம் அன்று புதிதாக கல் உப்பு கட்டாயம் வாங்கி வழிபடுங்கள்.
பச்சரிசி:
அடுத்து பச்சரிசியை புதிதாக வாங்கி வழிபடுங்கள். இப்படி செய்வதால் மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும்.
எலும்பிச்சை பழம்:
உங்கள் வீட்டில் வேல் இருந்தால் எலுமிச்சை பழத்தை புதிதாக வாங்கி அதில் சொருகி விடுங்கள், இல்லையென்றால் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதன் ஒரு பாதியில் மஞ்சளும், இன்னொரு பாதியில் குங்குமத்தை தடவி வாசற்படியில் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். இப்படி செய்வதினால் கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்லது நடக்கும்.
தைப்பூசம் வழிபடும் முறை:
தைப்பூசத்தின் முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்ய வேண்டும்.
தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து முருகனுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை அறையில் உள்ள அனைத்து சாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும்.
வீட்டில் வேல் இருந்தால் சுத்தமான நீரில் அபிஷேகம் செய்து விட்டு, அதன் பிறகு பால் அபிஷேகம், அதன் பிறகு பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஒரு கிண்ணம் அந்த கிண்ணமானது செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற எதாவது ஒரு கிண்ணம் எடுத்து அதில் பச்சரிசியை முழுவதும் நிரப்பி அதில் மலர்களால் அலங்காரம் செய்து வேலின் நடுவில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
சர்க்கரை பொங்கல், பால் பாயசம் செய்து வழிபடலாம்.
தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் செல்வம் அதிகரிக்கும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், நினைத்த காரியங்கள் நடக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2024
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |