Thaipusam Viratham Murai
தை மாதம் என்பது மிகவும் சிறப்பு பெற்ற மாதமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் தை பொங்கல் மற்றும் உழவர் திருநாள் போன்றவை வருகின்றது. மேலும் இந்த மாதத்திற்கு ஒரு பழமொழி கூட இருக்கிறது, அதாவது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். இது போல முருகனுக்கு பிரசித்தி பெற்ற மாதமும் இந்த மாதம் தான். ஏனென்றால் இந்த மாதத்தில் தான் தைப்பூசம் வருகின்றது.
முருகனுக்கு உகந்த நாளாக செவ்வாய் கிழமை இருக்கின்றது, இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு முறையில் விரதம் கடைபிடிக்கப்படும். சில பேர் புதிதாக விரதம் எடுப்பார்கள். அவர்களுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் தெரியாது, அதனால் தான் இந்த பதிவில் தைப்பூசம் விரதம் இருக்கும் முறையை பற்றி அறிந்து கொள்வோம்.
தைப்பூசம் என்றால் என்ன.?
தை மாதம் என்பது தெய்வீகமான மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌணர்மியும் சேர்ந்து வருமாம். இந்த நாளை தான் தைப்பூசம் என்று கூறப்படுகிறது. இந்த நாளானது முருக பெருமானுக்கு உரியதாக இருக்கிறது. மேலும் இந்நாளில் சிவபெருமானுக்கும், குரு பகவானுக்கும் சிறப்பு பெற்ற நாளாக இருக்கிறது.
தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை கூறினால் கேட்ட வரன் கிடைக்கும்…
தைப்பூசம் அன்று விரதம் இருக்கும் முறை | Thaipusam Viratham Rules in Tamil:
- தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளிக்க வேண்டும். அதன் பிறகு பூஜை அறையில் உள்ள முருக பெருமானுக்கு படத்தை சுத்தம் செய்து விட்டு பொட்டு மற்றும் பூ மாலை வைக்க வேண்டும்.
- விரதம் இருப்பவர்கள் காலை மாலை என இருவேளையும் குளித்துவிட்டு, காலையிலும் மாலையிலும் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். முருகன் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி, அரளி அல்லது மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து வழிப்படுவது சிறந்தது.
- முருகனுக்கு நெய்வேத்தியமாக காய்ச்சிய பால் தேன் கலந்து வைத்து வழிபடலாம். அந்த பாலை பிறகு நாம் அருந்தலாம்.
- தைப்பூசம் அன்றைய நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விரதம் எடுக்கலாம். சில பேர் பாலும், பழமும் மட்டும் எடுத்து கொண்டு ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு விரதம் எடுப்பார்கள். அதன் பிறகு முருக பெருமானுக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய் , வாழைப்பழம் போன்றவை வைத்து படைக்க வேண்டும். அதனுடன் அவருக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து படைக்கலாம்.
- மேலும் முக்கியமாக அன்றைய நாள் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ அல்லது கோபமாக மற்றவர்களை பேசுவதோ, வீண் விவாதங்கள் செய்வதையோ தவிர்க்க வேண்டும்.
- முருகப்பெருமானுக்கு பூஜை செய்யும் போது அவருக்கு உகந்த பாடல்கள் போன்றவற்றை சொல்லி வழிபடலாம். வீட்டில் பூஜை செய்தாலும் கோவிலுக்கு சென்று முருக பெருமானை வழிபடலாம்.
- முருகர் படம் முன் அமர்ந்து, முருகன் மந்திரங்களையும் கூறி, என்ன தேவைக்காக விரதம் இருக்கிறீர்களோ அதனை சொல்லி வேண்டி கொள்ள வேண்டும்.
- தைப்பூசம் மாலையில் முருகனுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைத்து வழிபட்டு விரதத்தினை நிறைவு செய்து கொள்ளலாம். கோவிலுக்கு சென்றும் விரதத்தினை நிறைவு செய்து கொள்ளலாம்.
என்ன பலன்:
முருக பெருமானுக்கு உரிய தைப்பூசம் அன்று விரதம் இருப்பதால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். வீட்டில் வறுமை இருந்தால் அவை நீங்கி செல்வ வளம் பெருகும். தீய சக்திகள் நம்மை நெருங்காது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இந்த நாளன்று நீங்கள் எதை நினைத்து முருக பெருமானிடம் வேண்டினாலும் அந்த வரன் கிடைக்கும். முருக பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |