குழந்தை தலையில் இரண்டு சுழி இருந்தால்
குழந்தை பிறந்தவனுடன் அதனின் உடல் உறுப்புகளை பார்ப்பார்கள். அந்த வகையில் பெரியவர்கள் பார்த்தால் தலையில் இரண்டு சுழிகள் இருந்தால் இவனுக்கு இரண்டு திருமணம் என்று சொல்வார்கள். சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரட்டை சுழிகள் அப்படியே இருக்கும். சில குழந்தைகள் வளர்ந்தவுடன் அந்த சுழிகள் மாறிவிடும். சுழிகளுக்கு ஆன்மிக அடிப்படையில் என்ன பலன்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.
தலையில் வலப்பக்கம் சுழி இருந்தால் என்ன பலன்:
உங்களது தலையில் வலப்பக்கம் சுழி இருந்தால் நீங்கள் மற்றவர்கள் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிகமாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் சுலபமாக சமாளிப்பீர்கள்.
தலையில் இடப்பக்கம் சுழி இருந்தால் என்ன பலன்:
தலையின் இடது பக்கம் சுழி இருந்தால் உங்களது வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பத்தை மட்டும் சந்திப்பீர்கள். உங்களது வாழ்க்கையில் எதையும் போராடி வெற்றி அடைவீர்கள். நீங்கள் பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை துன்பத்தை மட்டும் பார்த்தீர்கள் என்றால் திருமணத்திற்கு பிறகு உங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இடது பக்கத்தில் இரட்டை சுழி இருந்தால்:
நீங்கள் ஒரு சின்ன விஷயத்தையும் போராடி தான் பெற வேண்டியிருக்கும். இவர்கள் பிறந்ததிலுருந்து தனியாக வாழ கூடியவர்களாக இருப்பார்கள். அதாவது பெற்றோர்களை பிரிந்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.
வல பக்கம் மற்றும் இடது பக்கம் இரண்டு சுழிகள் இருந்தால்:
இவர்களின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி கொண்டே இருக்கும். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். இவர்கள் எந்த காரியத்தையும் விரைவாக செய்து முடித்து விடுவார்கள். மேலும் இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள்.
இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் என்பது உண்மை அல்ல. மேலும் இவர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிப்பார்கள். இவை அனைத்தும் மூட நம்பிக்கை.
உங்களுக்கு ஒற்றை சுழியாக இருந்தாலும் சரி, இரட்டை சுழியாக இருந்தாலும் சரி எந்த காரியத்தை எடுத்தாலும் நம்பிக்கையாக செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |