தாலி செயின் எத்தனை பவுனில் போடுவது நல்லது.?

Advertisement

Thali Chain Ethanai Pavun Irukka Vendum

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பெண்கள்  தாலி செயின் எத்தனை பவுனில் போடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.  பொதுவாக, திருமாங்கல்யம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. திருமாங்கல்யம் வாங்கும்போது, நல்லநேரம் உள்ளிட்ட பல விஷயங்களை பார்த்து தான் வாங்குவோம். அதேபோல், தாலி செயின் எத்தனை பவுனில் போட்டால் நல்லது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக, நகை எடுக்கும்போது நாம் வசதிக்கேற்ப நகைகளை வாங்கி அணிந்துகொள்வோம். நம்மிடம் உள்ள பணத்திற்கு ஏற்றவாறு நகைகளை எடுப்போமே தவிர எத்தனை கிராம், எத்தனை பவுனில் எடுப்பது நல்லது என்பது அறிந்து எடுக்க மாட்டோம். மற்ற நகைகளை விட பெண்களுக்கு முக்கியமான ஒன்றாக திகழும் தாலி ஜெயினை வாங்குவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன்படியே வாங்க வேண்டும்.

தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் மற்றும் நாள் 2024

தாலி செயின் வாங்கும்போது முதலில், அதற்கேற்ற நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வாங்க வேண்டும். அடுத்ததாக, தாலி ஜெயினை ஒற்றைப்படை வரிசையில் மட்டுமே வாங்க வேண்டும். அதாவது, ஓன்று, மூன்று அல்லது ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் வாங்க வேண்டும். ஒற்றைப்படையில் வாங்குவதன் மூலம் கணவன் மனைவி இருவரையும் பிரிக்க முடியாது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. அதன்படியே இக்காலத்தில் பலரும் பின்பற்றி வருகிறார்கள்.

ஆகையால், தாலி செயின் வாங்கும்போது 1 பவுன், 3 பவுன் மற்றும் 5 பவுன் என உங்கள் வசதியிற்கு ஏற்ப வாங்கிக்கொள்வது நல்லது. ஏற்கனவே, நீங்கள் தாலி செயின் இரட்டைப்படையில் வாங்கி இருந்தால், தாலியில் ஏதேனும், குண்டு, காசு மற்றும் மணி போன்றவற்றை சேர்த்து ஒன்றைப்படையில் அணிந்து கொள்ளுங்கள்.

பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

ஒவ்வொருவரும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தின்படி தாலி செயின் வாங்குவார்கள். தாலி செயின் வாங்கி அதில், குண்டு, காசு மற்றும் மணி போன்றவற்றை சேர்த்து கோர்த்து போடுவார்கள். எனவே, நீங்கள் தாலி செயின் எத்தனை பவுனில் வாங்கினாலும் அது ஒற்றைப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தாலி செயின் எந்த இடத்தில் வைக்க வேண்டும்:

தாலியை தங்கத்தில் அணிந்திருந்தால் கூட அதில் கொஞ்சமாவது மஞ்சள் கயிறு இருக்க வேண்டும். கழுத்தில் போடப்பட்டிருக்கும் மாங்கல்யம் ஆனது நெஞ்சு குழிக்கு கீழே தொப்புள் இருக்கும் இடத்திற்கு மேலே  இருக்க வேண்டும். சில பேர் தொப்புளுக்கு கீழே அணிய கூடாது. இது தவறான முறையாகும்.

தாலி கொடி வகைகள்:

தாலி கொடி பல வகைப்படும். அவற்றில் சிலவற்றை பற்றி அறிந்து கொள்வோம். கறுந்தாலி, மஞ்சள் தாலி, தங்க தாலி, வின்டேஜ் தாலி, நவீன தாலி என்று பல வகைப்படும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement