தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் மற்றும் நாள் 2024

Advertisement

Thali Kayiru Matrum Matham | Thali Kayiru Matra Nalla Naal 2024 | சித்திரை மாதம் தாலி கயிறு மாற்றலாமா

பெண்கள் அனைவருக்கும் வணக்கம். பாரம்பரிய முறைப்படி தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் மற்றும் நாள் 2024 தெரிந்துகொள்வோம் வாங்க. தாலி எனது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாக, தாலி மாற்றுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன்படியே பெண்கள் தாலியை மாற்ற வேண்டும். அதாவது, தாலியை மாற்றுவதற்கு உகந்த மாதம் மற்றும் உகந்த நாள் உள்ளது. அந்த உகந்த மாதத்தில் தான் தாலியை பெண்கள் மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு பெண்களும், ஒவ்வொரு முறைப்படி தாலியை மாற்றுவார்கள். பல பெண்கள் ஆடிப்பெருக்கு தினத்தில் தாலியை மாற்றுவார்கள். அந்நாளை தவிர்த்து வேறு எந்த நாளில் தாலியை மாற்றுவது என்று பல பெண்களுக்கு குழப்பமாக இருக்கும். அதிலும், இப்போது ஒரு சில பெண்களுக்கு தாலி மாற்றும் முறை பற்றி தெரிவதில்லை. ஆகையால், பெண்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில், தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் மற்றும் நாள் 2024 (தாலி கயிறு மாற்ற ஏற்ற நாள் 2024) கொடுத்துள்ளோம்.

மாங்கல்ய கயிறு மாற்ற உகந்த நாள்- தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் 2024:

தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் 2024

  • சித்திரை
  • வைகாசி
  • ஆடி
  • ஆவணி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மாசி

பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

சித்திரை:

சித்திரை மாதத்தில் வரும் மீனாட்சி திருக்கல்யாணம் அன்று தாலியை மாற்றினால் மிகவும் நல்லது.

வைகாசி:

வைகாசி மாதத்தில் வரக்கூடிய நல்ல நாளில் தாலி கயிற்றினை மாற்றலாம்.

ஆடி:

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலியை மாற்றுவது மிகவும் சிறந்தது.

ஆவணி:

ஆவணி மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,  மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.

ஐப்பசி:

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.

கார்த்திகை:

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.

மாசி:

மாசி மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி, மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.

தாலி மாற்ற உகந்த கிழமை:

  • திங்கள்
  • செவ்வாய்
  • வியாழன்

தாலி மாற்றுவதற்கு திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் உகந்த கிழமையாக இருக்கிறது.

திருமணம் செய்ய உகந்த மாதம்

தாலி மாற்றும் முறை:

தாலி கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறையாவது கட்டாயம் மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

தாலிக்கயிறு மாற்றும் முன்பு குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, கிழக்கு பார்த்தபடி அமர்ந்து மாற்றவேண்டும்.

தாலி மாற்றுவதற்கு முன்பாக தேவையான திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து அருகில் வைத்து கொள்ள வேண்டும். பாதியில் எழுந்து போக கூடாது.

கணவர், சுமங்கலியாக இருக்கும் பெண்கள், மாமியார் இவர்கலில் என்றேனும் ஒருவர் பக்கத்தில் இருக்கும்போது மாற்ற வேண்டும்.

தாலியை முறையாக மாற்றி, தாலிக்கு பூ, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு, கடவுளை வணங்கி விட்டு மற்ற வேலைகளை பார்க்க வேண்டும்.

தாலி கயிற்றை மாற்றிய பிறகு, சுமங்கலி பெண்களுக்கு மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், பூ, மஞ்சள் கயிறு மற்றும் ஐந்து கண்ணாடி வளையல்கள் வாங்கி கொடுப்பது நல்லது.

வளைகாப்பு செய்ய உகந்த நாள் 2024

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement