பெண்கள் தாலி மாற்றிய பின் பழைய கயிற்றை என்ன செய்யணுன்னு தெரியுமா..?

thali kayiru matrum murai in tamil

பழைய தாலி கயிற்றை என்ன செய்ய வேண்டும் 

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் காணப்போகும் பதிவு என்னவென்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி தாலி என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். இந்து சமயத்தில் முக்கிய இடத்தை வகிப்பது இந்த தாலி தான். தாலி எவ்வளவு பாரம்பரியமான ஓன்று என்று நம் அனைவருக்குமே தெரியும். தாலி தான் ஒரு பெண்ணுக்கு வேலி என்று சொல்வார்கள். ஆனால் இப்போ இருக்கின்ற காலகட்டம் அப்படியா இருக்கிறது. காலம் ரொம்பவும் மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஆனாலும் தாலியை மதிக்கும் பெண்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அப்படி தாலியை புனிதமாக நினைக்கும் பெண்களுக்காக தான் இந்த பதிவு. சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

பெண்கள் தாலி மாற்றிய பின் பழைய கயிற்றை என்ன செய்வது..?

 thali kayiru matrum murai

பொதுவாக இந்து சமய பெண்கள் தாலியை புனிதமாக நினைப்பார்கள். அவர்கள் சில மாதங்களுக்கு ஒரு முறை தன் தாலி கயிற்றை மாற்றுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது பெரும்பாலும் பலரும் தாலி செயின் தான் அணிகிறார்கள்.

இருந்தாலும் தாலி கயிறு அணிபவர்கள் சில நேரம், தாலி மாற்றும் போது, பழைய கயிற்றை அப்படியே வைத்து விடுவார்கள். அல்லது குப்பையில் போடுவார்கள். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறான செயல்.

  • அதுபோல நினைத்த நேரத்தில் தாலி கயிற்றை மாற்ற கூடாது. 1 வருடத்தில் 2 அல்லது 3 முறை தான் தாலி மாற்ற வேண்டும். அதுவும் கயிறு பழுதாகி மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதனை மாற்ற வேண்டும்.
  • திருமாங்கல்யத்தை மாற்றும் போது மற்றவர் யாரும் பார்க்கக்கூடாது. மற்றவர்கள் துணையில்லாமல் அவரவர் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • புது தாலி கயிற்றில் அனைத்தையும் கோர்த்து, அதனை கழுத்தில் போட்ட பின்பு தான் பழைய கயிற்றை கழுத்திலிருந்து எடுக்க வேண்டும். அதுபோல கழட்டிய பழைய கயிற்றை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் சேர்த்து விடலாம். குப்பையில் மட்டும் போடக்கூடாது.
  • குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அந்த நேரத்தில் கயிற்றை மாற்றக்கூடாது.

பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்