வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தாமரை பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள் | Thamarai Poovil Amarnthavale Song Lyrics in Tamil

Updated On: June 26, 2025 6:16 PM
Follow Us:
thamarai poovil amarnthavale song lyrics in tamil
---Advertisement---
Advertisement

தாமரை பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்

முன்னடியெல்லாம் பிராமிணர் வீட்டில் தான் பூஜை செய்யும் போது பாடல்களை பாடி பூஜை செய்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான வீட்டில் பூஜை செய்யும் போது பாடல்களை பாடி பூஜை செய்கிறார்கள். பாடல் வரிகள் தெரியாவிட்டாலும் அதற்கான புத்தகத்தை  அதனை பார்த்து பாடுகிறார்கள். இப்படி பாடுவதால் கடவுளின் அருள் முழுமையாக கிடைப்பதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கடவுளுக்கு ஏற்ற பூஜை பாடல்கள் உள்ளன. கல்வியின் விளக்காக இருப்பவள் சரஸ்வதி தேவி. இவருக்கு சரஸ்வதி பூஜை அன்று பாட கூடிய பாடலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

Thamarai Poovil Amarnthavale Song Lyrics in Tamil

தாமரைப் பூவில் அமர்ந்தவளே
தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாடல் வரிகள்

சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே

செல்வங்கள் பெருகும் உந்தன்
திருவருள் துணையாலே
செல்வங்கள் பெருகும் உந்தன்
திருவருள் துணையாலே
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே

தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

இந்த பாடல் ஆனது லட்சுமி தேவியின் அழகு, கருணை, உலக நலன், பக்தர்களை காக்கும் தன்மை, செல்வ வளம் வழங்கும் அருள் போன்றவற்றை குறிப்பதாக இந்த பாடல் இருக்கிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now