பிறந்த குழந்தைக்கு நகை போடும் முன்னால் இதை செய்தால் நகை சேர்ந்து கொண்டே இருக்கும்..!

Advertisement

குழந்தை நகைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் குழந்தைக்கு நகை சேருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவின் போது நகை போடுவார்கள். அப்பொழுது தான் குழந்தைக்கு முதல் முதலாக நகை போடுவார்கள். நீங்கள் குழந்தைக்கு முதல் முதலாக நகை போடுவதற்கு முன் இப்படி செய்தால் நகை சேர்த்து ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு என்ன செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ நகை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மஞ்சள் பயன்கள்:

நீங்கள் குழந்தைக்கு போடும் நகைகளை எடுத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் சிறிது மஞ்சள் சேர்க்கவும். இந்த தண்ணீரில் நகையை போட்டு எடுக்கவும். நகையை நனைத்த பிறகு ஒரு துணியை வைத்து நகையை துடைத்து கொள்ளவும். இப்படி செய்வதினால் நகையில் உள்ள தோஷங்கள் நீங்கி விடும்.

பூ:

அடுத்ததாக புதிதாக ஒரு காட்டன் துணியை எடுத்து கொள்ளுங்கள். காட்டன் துணி அல்லது எதாவது இரு புதிதாக உள்ள துணியை எடுத்து கொள்ளவும். புதிதாக எடுத்து வைத்திருக்கும் துணி முழுவதும் வாசனையாக உள்ள பூ எதுவாக இருந்தாலும் அந்த துணியில் வைத்து பரப்பி விடுங்கள்.

பிறகு குழந்தைக்கு வாங்கி வந்த நகையை அந்த துணியில் வைத்து கட்டி விடுங்கள். பின் நகையை கட்டி வைத்த துணியை பூஜை அறையில் வைக்க வேண்டும். அந்த துணி பூஜை அறையில் ஒரு 2 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.

பிறகு கற்பூர தீபாராதனை காட்டுங்கள். பின் இந்த நகையை குழந்தைக்கு போடுங்கள்.

மலர்கள் நகையின் மீது படுவதால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வாசனை மலர்களில் மகாலட்சுமி குடியிருப்பாள். இந்த இரண்டு பொருள்களும் சேரும் போது ஐஸ்வர்யமாக மாறி விடும். அதனால் இந்த நகையை உங்கள் குழந்தைக்கு போட்டு விடும் போது குழந்தைக்கு நகை சேரும்.

உங்கள் குழந்தைக்கு முதன் முதலாக நகை போட போகிறீர்கள் என்றால் மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை மறக்காமல் செய்து விடுங்கள் நண்பர்களே..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

 

Advertisement