வீட்டில் பணத்தை சேர விடாமல் தடுக்கும் தரித்திரம் நிறைந்த பொருட்கள்! முதலில் இதை தூக்கி எறியுங்கள்!
நாம் என்னதான் கஷ்டப்பட்டு வீட்டிற்காக உழைத்தாலும் வீட்டில் பணம் சேரவே சேராது, வீட்டில் கடன் பிரச்சனை மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதற்கு ஆன்மிக ரீதியாக நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் வீட்டிற்கு அதிகம் தரித்திரியத்தை சேர்க்கும் பொருட்கள் ஆகும். வீட்டில் தரித்திரியம் நிறைந்த பொருட்களை வைத்திருந்தோம் என்றால் அது நமக்கு மேலும் மேலும் கடன் பிரச்சனையை தான் அதிகரிக்க செய்யும். ஆக அந்த பொருட்களை வீட்டை விட்டு அகற்றி வைத்திருந்தோம் என்றால் ஓரளவு நமது வீட்டில் ஏற்படும் பணம் பிரச்சனையை சரி செய்யமுடியும். சரி வாங்க வீட்டில் பணத்தை சேர விடாமல் தடுக்கும் தரித்திரம் நிறைந்த 10 பொருட்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தரித்திரம் நீங்க – Tharithiram Neenga
பழைய சாமான்கள்:
பொதுவாக பலர் பழைய இரும்பு சாமான்களை இரும்பு கடைகளில் போடுவதற்கு சேர்த்து வைத்துக்கொண்டே இருப்பார்கள், இது நமது வீட்டில் தரித்திரத்தை சேர்த்து வைப்பதற்கு சமம். ஆக பழைய சாமான்களை வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்க கூடாது அடிக்கடி அகற்றி விடுவது மிகவும் நல்லது.
உடைந்த பொருட்கள்:
வீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள் ஓட்டை உடைசலாக இருந்தால் அந்த பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் இந்த பொருட்கள் நம் வீட்டில் பணவரவு குறைந்துக் கொண்டே போகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவை தட்டப்போகிறது..! திறக்க தயாராக இருங்க..!
கிழிந்த மிதியடி:
பொதுவா அனைவரது வீட்டிலும் மிதியடி பயன்படுத்துவோம். அந்த மிதியடியை மாற்றவே மாட்டார்கள் பலவருடங்களாக ஒரே மிதியடியை பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முளை மிதியடியை மாற்ற வேண்டும். அதேபோல் கிழித்து அல்லது நஞ்சிபோன மிதியடியை தயவு செய்து பயன்படுத்தவே வேண்டாம், இவை வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
நகம் வெட்டுவது:
வீட்டில் தலை சீவும் போது வீட்டிற்குள் தலைமுடி உதிர கூடாது இது மிகவும் தரித்தரமான விஷயம் ஆகும். அதேபோல் நகத்தை வெட்டியும் வீட்டிற்குள் போடக்கூடாது இவை இரண்டுமே வீட்டிற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் பணம் கஷ்ட்டம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும்.
பழைய செருப்பு:
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட செருப்புகள் ஷூக்களை பயன்படுத்துவார்கள், அவ்வாறு பயன்படுத்தும் காலனிகளில் சில பயன்படுத்த முடியாததாக இருக்கலாம் அல்லது பழைய செருப்புகள், ஷூக்கள் இருக்கும். இவற்றையெல்லாம் முதலில் உங்கள் வீட்டை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இவை உங்கள் வீட்டில் செல்வ வளத்தை குறைத்துக் கொண்டே இருக்கும்.
பழைய துடைப்பம்:
வீட்டை சுத்தம் செய்வதற்கு நம் வீட்டில் துடைப்பம் இருக்கும், இந்த துடைப்பம் பழசாகிவிட்டது என்றால் புதிய துடைப்பம் வாங்குவோம், ஆனால் அந்த பழைய துடைப்பத்தை தூக்கி எறியாமல் அவற்றையும் பயன்படுத்துவோம் இது தரித்திரத்தை ஏற்படும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆக புதிய துடைப்பம், விளக்கமாறு வாங்கியதும் பழைய துடைப்பத்தை தூக்கி எறிந்து விடுங்கள்.
எரியாத பல்பு:
வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் டியூப் லைட், குண்டு பல்பு போன்ற பல்புகள் எரியாமல் இருந்திருக்கும். அவற்றை நாம் சரி செய்யாமல், மாற்றாமல் அப்படியே விட்டிருப்போம். இவற்றை நாம் உடனே தூக்கி எறிந்து விடுவது மிகவும் நல்லது என் என்றால் இந்த விஷயமும் வீட்டுக்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
கிழிந்த துணிகள்:
கிழிந்து போன துணிகளையும் வீட்டிற்குள் வைத்திருப்பது வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஆகி வீட்டில் கிழிந்த துணிகள் இருந்தாலும் அதனை உடனே தூக்கி எறிவது மிகவும் சிறந்தது.
ஓடாத கடிகாரம்:
வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தாலும் அதனை உடனே சரி செய்து ஓடவைத்துவிடுங்கள், அதனை சரி செய்ய முடியாது என்றால் தூக்கி எறிந்துவிடுங்கள் இவையும் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |