தர்ப்பணம் என்றால் என்ன.?

Advertisement

தர்ப்பணம் என்றால் என்ன | Tharpanam in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தர்ப்பணம் என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தர்ப்பணம் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை நாட்களில், இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காசி, ராமேஸ்வரம் போன்ற தீர்த்த தலங்களுக்கு செல்வார்கள். நீர் நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். பித்ருக்களை வழிப்படுவதால் பித்ருக்கள் தோஷம், சாபம் போன்றவை நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.

Tharpanam Meaning in Tamil:

தர்ப்பணம் என்றால் என்ன

தர்ப்பணம் என்பது ஒரு புண்ணிய காரியம் ஆகும். இது இறந்தவர்களுக்கு உணவு அளித்து வழிபாடு செய்யும் வழிபாட்டு முறையாகும். அமாவாசை நாட்களில், தீர்த்த தலங்களுக்கு சென்று நம் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து வழிபாடு செய்வது தான் தர்ப்பணம் ஆகும். இதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா திருப்தி அடைகிறது.

தர்ப்பணம் செய்யும்போது, நீரை இரண்டு உள்ளங்கைகளால் எடுத்துக்கொண்டு, “ஆதித்யா தர்ப்பயாமி” என்று கூறி கீழே விட வேண்டும்.

குறிப்பாக கருப்பு எள் கலந்த தண்ணீர் பயன்படுத்துவது இறந்தவர்களின் தாக்கத்தையும் பசியையும் போக்குவதாக கூறப்படுகிறது.

தர்ப்பணம் செய்ய தேவையான காய்கறிகள்..!

தர்ப்பணம் என்றால் “திருப்தி செய்வது” என்பது அர்த்தம் ஆகும். எனவே, இறந்த நம் முன்னோர்கள் பூமிக்கு வரும் காலத்தில் இறந்தவவர்ளுக்கு நீர் அல்லது உணவு அளித்து அவர்களை திருப்தி அடைய செய்வது ஆகும்.

அமாவசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, அமாவாசை நாட்களில் இறந்த நம் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

தர்ப்பணம் ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் செய்வார்கள். முக்கியமாக, தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

தர்ப்பணம் செய்து முடித்த பிறகு, வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படையல் இட்டு, காகத்திற்கு சத்தம் வைத்து வழிப்படுவார்கள். மேலும், பசு மாட்டிற்கு அகத்திக்கீரை மற்றும் அரிசி கலந்த உணவுகளை கொடுப்பார்கள். இவை அனைத்துமே தர்ப்பணத்தில்  அடங்கும்.

பித்ரு 108 போற்றிகள்..! | Pitru 108 Potri Lyrics in Tamil

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement