Theera Kadan Theera Pariharam in Tamil
மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. அதாவது ஒருசிலருக்கு மிக மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இதுவே மாறாக ஒருசிலருக்கு மிக மிக கஷ்டமான வாழ்க்கை அமையும். அப்படி நமக்கு அமையும் வாழ்க்கையிலும் நமக்கு பலவகையான கடமைகள் இருக்கும் அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் இன்றைய சூழலில் நமக்கு முதலில் தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் ஓடி ஓடி சம்பாதித்து சேமித்து வைப்போம். அப்படி நாம் சேமித்து வைத்துள்ள தொகையும் பற்றவில்லை என்றால் நாம் மற்றவர்களிடம் கடன் வாங்குவோம். அப்படி நாம் வாங்குகின்ற கடனை திருப்பி செலுத்துவதற்குள் நாம் படுகின்றபாடு இருக்கின்றதே அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அப்படி நமக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்குவதற்க்கு உதவு ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் நீங்க சர்க்கரையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்
Kadan Theera Pariharam in Tamil:
உங்களுக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் போக்கி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் எளிமையான பரிகாரம் மற்றும் அதனை செய்யும் முறை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை:
- பாசிப்பருப்பு – தேவையான அளவு
- நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
- கண்ணாடி கிண்ணம் – 1
கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்
பசுமாடு பரிகாரம் செய்யும் முறை:
நாம் என்று இந்த பரிகாரத்தை செய்ய போகின்றோமோ அன்றை நாளிற்கு முதல் நாள் இரவு 1 கண்ணாடி கிண்ணத்தில் முழுவதும் நிரம்புமாறு பாசிப்பருப்பினை சேர்த்து அது ஊறுவதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு மறுநாள் காலையில் நாம் ஊறவைத்துள்ள பாசிப்பருப்புடன் சிறிதளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு தனமாக அளித்து விடுங்கள்.
நீங்கள் தானம் அளிக்கும் பொழுது என்னுடையை கடன் தீர வேண்டும் என்று மனமார வேண்டி கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.
செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |