கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்
தினமும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் அனைவருக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நிதிநிலை சார்ந்த கஷ்டங்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிகம் கடன் பிரச்சனை உள்ளவர்கள் எப்படி இந்த கடன் பிரச்சனையை சரி செய்வது என்று, ஒவ்வொரு நாளும் யோசித்து சரியாக சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் கவலைப்படுபவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சனை தீர ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்காத என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் பண கஷ்டம் தீர என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
தீராத கடன் பிரச்சனையும் தீர:
செவ்வாய்கிழமையில் ராகு காலத்தில் செய்யப்படும் வழிபாட்டு மற்றும் பூஜைக்கு மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் செவ்வாய்கிழமையில் எந்த ஒரு செயலையும் தொடங்க தயங்குவார்கள். ஆனால் இந்த செவ்வாய் ராகு மிகவும் சிறந்தது.
செவ்வாய்கிழமை செய்யும் வழிபாடு மற்றும் பரிகாரங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வகையில் இன்று தீராத கடன் பிரச்சனைகள் தீர நீங்கள் செவ்வாய் கிழமை செய்யவேண்டிய பரிகாரங்கள் இதோ:
உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த கடவுளை வழிபாட்டு பரிகாரத்தை செய்யுங்கள்…
செவ்வாய்கிழமை அன்று வரும் முதல் ஹோரையில் பாசிப்பயறு அல்லது பச்சை பயறு உடன் வெல்லம் கலந்து பாயசம் செய்து கடன் பிரச்னைகள் தீரவேண்டும் என நினைத்து கடவுளை வணங்க வேண்டும்.
இரண்டாவதாக ஹோரையானது செவ்வாய்கிழமையில் பகல் 1 மணி முதல் 2 மணிக்கு வரும் அப்போது பச்சரிசியை, பச்சைப்பயறு மற்றும் வெல்லம் கலந்து, வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன் வைத்து, வழிபட்டு விட்டு அதனை பசுவிற்கு படைக்க வேண்டும். பசு மாட்டிற்கு இந்த தானத்தை வழங்கிய பிறகே பகல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செவ்வாய் மாலை 6 மணிக்கு மேல் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். வழக்கமாக ஏற்றும் விளக்கு ஏற்றினாலும் தனியாக ஒரு அகலில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி செவ்வாய் ஹோரையில் வழிபாடு செய்வதன் மூலம் உங்கள் கடன் பிரச்சனை தீரும்.
பூஜையறையில் வைக்க வேண்டிய மங்களகரமான பொருட்கள்….
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |