தீராத கடன் தீர எளிய மிளகு பரிகாரம் இப்படி தான் செய்யனும்..!

Advertisement

Theeratha Kadan Theera Eliya Vali

கடன் என்பது பலருக்கும் பல வழிகளில் தீராத பிரச்சனையினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. ஏனென்றால் கடன் வாங்குவது என்பது இக்கட்டான ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் கூட, அதனை திருப்பி செலுத்துவதில் தான் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாமலே வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நினைத்தாலும் கூட அதற்கான வாய்ப்புகள் என்பது சிலருக்கு வராமல் தட்டி கொண்டே போவது ஒரு சிக்கலாகவே காணப்படுகிறது. அதனால் இன்று நமது ஆன்மீக தகவல் வாயிலாக தீராத கடனையும் எளிய முறையில் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து படிக்கலாம் வாங்க..!

தீராத கடன் தீர எளிய வழி:

சமையலில் சேர்க்கக்கூடிய மிளகு ஆனது நமது உடலுக்கு ஆரோக்கியத்தினை அளிப்பதோடு மட்டும் இல்லாமல் ஆன்மிகம் ரீதியாக சில தாந்தீரீக பரிகாரங்களை செய்யவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

  • மிளகு- 27 
  • அகல் விளக்கு- 1
  • வெள்ளை துணி- 1
  • நல்லெண்ணெய்

தீராத கடன் தீர எளிய வழி

முதலில் ஒரு வெள்ளை துணியில் 27 மிளகை வைத்து நன்றாக கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அத்தகைய மூட்டையினை நீங்கள் தூங்கும் முன் தலைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

மறுநாள் காலையில் தலை  குளித்து விட்டு இந்த மூட்டையினை எடுத்துகொண்டு பைரவர் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள்.

அடுத்தபடியாக அகல் விளக்கில் நல்லெண்ணெய் சேர்த்து மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து விட்டு அதன் பிறகு தீபம் ஏற்ற வேண்டும். இத்தகைய பரிகாரத்தை செய்யும் போது உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை அனைத்தும் தீர வேண்டும் என்று நினைத்து கொள்ளுங்கள்.

எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்:

இந்த மிளகு பரிகாரத்தை வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் செய்ய வேண்டும். அதேபோல் 9 வாரம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

மேலும் இந்த பரிகாரத்தை செய்த கையோடு கடன் தீர நீங்கள் என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதனையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

கடன் தொல்லை நீங்கி செல்வம் சேர இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement