தீட்டின் விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

தீட்டு விதிமுறைகள் | Theetu Rules in Tamil

தீட்டின் விதிமுறைகள் பற்றி அறியும் முன், தீட்டு என்றால் என்ன, ஏன் இந்த தீட்டு நாட்களில் இது செய்யலாம், இது செய்யக்கூடாது என்றெல்லாம் வகைப்படுத்திகிறார்கள் என்று இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். வெறும் இறப்பு தீட்டு மட்டும் தீட்டாக கருதப்படமாட்டாது தீட்டிலும் வகைகள் இருக்கின்றது.

காலத்தின் தொடக்கத்தில் இருந்து, பெரும்பாலான தனிநபர்கள் தீட்டுகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இருப்பினும், தீட்டு என்றால் என்ன அல்லது தீட்டின் அர்த்தம் என்ன என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இது உரையாற்றப்படுகிறது. தீட்டின் உண்மையான அர்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

தீட்டு வகைகள் 

தீட்டில் நிறைய வகைகள் உள்ளன.. அவற்றில் மிக முக்கியமானவை.

  • பிறப்புத்தீட்டு
  • இறப்புத்தீட்டு
  • கன்னித்தீட்டு (ருது தீட்டு)
  • மாதவிடாய் தீட்டு முதலியன.

ருது தீட்டு எத்தனை நாள்..! | Kanni Thettu Ethanai Naal Teriyuma

தீட்டு நாட்கள்

பொதுவாக தீட்டு நாட்கள் 16 நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது, இவை அனைத்து தீட்டிற்கும் பொருந்தும். சில விசயங்களுக்கு மட்டும் தீட்டு நாட்கள் மாறுபடும், எல்லா தீட்டிற்கும் 10 நாட்களே போதுமானதாகும்.

தீட்டு கழிப்பது எப்படி

குழந்தை பிறந்த தீட்டு கழித்தல், கன்னி தீட்டு கழித்தல், பங்காளி தீட்டு கழித்தல் போன்ற தீட்டுகளை கழிக்க அவர்கள் ஒன்று பண்ணினாள் போதும். இந்த தீட்டு நாட்களில் அவர்கள் கீழே உள்ள Theetu Rules அதாவது தீட்டு விதிமுறைகள் கடைபிடிக்கவேண்டும், அதன் பின் ஐயர் வைத்து புண்ணியதானம் செய்தலே போதும் உங்களை பிடித்த தீட்டு நீங்கிவிடும்.

பங்காளி தீட்டு எத்தனை நாட்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

Theetu Rules in Tamil

நம்முடைய வீட்டில் நடக்கும் அனைத்து விஷயத்திற்கும் விதிமுறைகள் இருக்கின்றதோ, இதை இப்படி தான் செய்யவேண்டும் இது இங்கு தான் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்களோ, அதே போல தான் இந்த தீட்டிருக்கும் விதிமுறைகள் இருக்கின்றது. அது என்னென்னவென்று கீழே பார்ப்போம்.

  • தீட்டு நாட்களில் கோவிலுக்கு செல்லக்கூடாது.
  • அசைவ உணவுகள் சாப்பிட கூடாது.
  • மதுபானங்கள் அருந்த கூடாது.
  • நகம் வெட்ட கூடாது.
  • வெளியில்தங்கக்கூடாது.
  • சுப காரியங்களுக்கு செல்ல கூடாது.
  • தீட்டு நாட்களில் புத்தம் புதிய ஆடை அணியக்கூடாது.
  • இந்த நாட்களுக்கு ஏற்றார் போல் விரதம் இருக்கவேண்டும்.

இவையே பொதுவாக சொல்லப்படும் theetu rules ஆகும். ஆனால் இதில் பலவற்றை நாம் கடைபிடிக்க தேவை இல்லை, அவை யாவும் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement