வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்

Updated On: October 29, 2025 4:39 PM
Follow Us:
thengai kanavil vanthal
---Advertisement---
Advertisement

இளநீர் கனவில் வந்தால் என்ன பலன் | Thengai Kanavil Vanthal Enna Palan

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தேங்காய் கனவில் வந்தால் ( coconut kanavu palan in tamil) என்ன பலன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.  இன்றைய பதிவில் தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக நிறைய வகையான கனவுகள் வந்திருக்கும் அது அனைத்திற்கும் என்ன பலன்கள் என்பதை முன் பதிவுகளை படித்து அறிந்திருப்பீர்கள் அப்படி உங்களுக்கு நிறைய விதமான கனவுகளுக்கு என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

ஒரு சில கனவுகள் நமக்கு நினைவு இருக்கும் ஒரு சிலர் கனவுகள் நமக்கு நினைவு இருக்காது. அதனை நம் வீட்டு பெரியவர்களிடம் கேட்டு அறிந்திருப்போம்.

தேங்காய் கனவு பலன்:

கனவு என்பது அனைத்து மனிதர்களுக்கும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாகும் அப்படி இருக்கும் பட்சத்தில். நாள் தோறும் கனவுகள் என்பது வரும் அப்படி வரும் கனவுகள் சிலருக்கு நியாபகம் இருக்கும் சிலருக்கு நியாபகம் இருக்காது அதேபோல் வந்த கனவுகள் ஞாபகம் இருந்தாலும் அது அவ்வளவு சரியாக சொல்ல முடியாது சரி வாங்க நம் கனவில் தேங்காய் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

நம்முடைய கனவில் தேங்காய் கிடைப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் என்றால் நம்முடைய தொழில் ஏதேனும் நல்ல முன்னேற்றம் அடைய போகிறோம் என்ற ஒரு நல்ல செய்தியை நமக்கு அந்த கனவு உணர்த்துகிறது.

இளநீர் கனவில் வந்தால் என்ன பலன்:

இளநீரை கனவில் பார்த்தால் உங்களுக்கோ அல்லது உங்களை சேர்த்தவர்களுக்கோ ஏதேனும் ஆரோக்கிய கோளாறுகள் இருந்தால் அவர்களுக்கு பூராமனாக குணமாகும் என்பதை குறிக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் மரத்தின் மீது ஏறி இளநீர் பறிப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் விரைவில் முடிய போகிறது என்று அர்த்தம்.

அழுகிய தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்:

தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

அழுகிய தேங்காய் கனவில் கண்டால் அது நல்லதாகும். கோவிலுக்கோ அல்லது வீட்டில் தேங்காய் உடைத்து அது அழுகி இருந்தால் மட்டுமே அது கெட்ட சகுனம் கனவில் தேங்காய் அழுகி இருந்தால் அது முற்றிலும் நல்ல சகுனம். நீங்கள் செய்ய கூடிய செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலனை கொடுத்து வெற்றியை தரக்கூடும்.

உடைத்த தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்:

உடைத்த தேங்காய்  கனவு கண்டால் நீங்கள் செய்யும் செயலில் வெற்றியை அடைவீர்கள் என்பதை குறிக்கிறது. உங்களுக்கு செல்வம் சேர போகிறது என்பதை குறிக்கிறது.

தேங்காய் உடைப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு நிறைவேறாத ஆசை இருந்தால் அவை இந்த நேரத்தில் நிறைவேறும் என்பதை குறிக்கிறது.

தேங்காய் உரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

நீங்கள் எடுத்து செய்யப்போகும் செயல்களில் எதோ ஒன்றில் புதிய முயற்சிகளை எடுக்க போகிறீர்கள் என்றும் அதற்கு மனதில் நல்ல வலிமையையும் கிடைக்கும் என்றும் அர்த்தமாம்.

மட்டை தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்:

நீங்கள் புதியதாக தொழிலோ அள்ளாது வேறு ஏதோ செய்ய போகிறீர்கள் என்றால் அந்த செயலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம். நீங்கள் செய்யும் தொழிலிருந்து லாபம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

முழு தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்:

நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்க போகிறது என்பதை உணர்த்தவே இது போன்ற கனவுகள் ஏற்படுகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் புதிதாக திட்டம் வைத்திருந்தால் அதனை செயல்படுத்துவதன் மூலம் அதில் லாபம் கிடைக்கும்.

தேங்காய் கனவில் வந்தால் நல்லதா.! கெட்டதா.!

தேங்காய் கனவில் வருவது ஆன்மிகத்தில் நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தேங்காயை நாம் எப்படி காண்கிறோம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். பச்சை தேங்காயை மட்டையோடு கண்டால் ஆண் குழந்தை பிறக்குமாம்.

உடைந்த தேங்காய் கனவு:

நீங்கள்  உடைந்த தேங்காயை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் அவமானத்தை சந்திக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தவே இது மாதிரி கனவுகள் வருகிறது.

கோவிலில் தேங்காய் உடைப்பது போல் கனவு கண்டால்:

கோவிலில் தேங்காய் உடைப்பது போல கனவு கண்டால் உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது என்பது உணர்த்துகிறது.

தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

தேங்காய் இப்படியெல்லாம் உடைந்தால் கெட்ட சகுனமா..!

தேங்காயில் ஏன் குடுமியை பிரிப்பதில்லை தெரியுமா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now