தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் வரிகள்..! | Thennadudaya Sivane Potri

Advertisement

தென்னாடுடைய சிவனே போற்றி பாடியவர் – Thennadudaya Sivane Potri Lyrics in Tamil

நமக்கு ஏதாவது மன கஷ்டம் என்றால் உடனே நண்பர்கள், உறவினர்கள், அம்மா அப்பா என இவர்களிடம் சொல்வது வழக்கம். அதேபோல் சிலர் அவர்களுக்கு பிடித்த நபர்களிடம் மட்டுமே அனைத்தையும் சொல்வார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று அங்கு அதனை நினைத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் இன்னும் சில கோவில்களுக்கு செல்வார்கள். அங்கு சென்றால் போதும் அவர்களுக்கு மன கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

தெய்வங்களை நினைத்து வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலர் விரதம் மேற்கொள்வார்கள். அந்த காலத்தில் உள்ளவர்கள் தெய்வங்களை நினைத்து வழிபடுவது மட்டுமல்லாமல் அவர்களை வாழ்த்தி பாடல்களும் பாடி உள்ளார்கள். இப்போதும் அந்த பாடல்களை பாடியும் வருகிறார்கள். அப்படி நாம் அதிகமாக சிவனை வழிபடும் போது அனைவரும் தென்னாடுடைய சிவனே போற்றி என பாடும் பாடலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

தென்னாடுடைய சிவனே போற்றி பாடியவர் யார்?

தென்னாடுடைய சிவனே போற்றி பாடியவர் மாணிக்கவாசகரால் திருவாசகம் நூலில் எழுதப்பட்டது.  இந்த திருவாசகம் 51 பதிகங்களை கொண்டது. அதில் மொத்தமாக 658 பாடல்கள் இருக்கின்றன. மாணிக்கவாசகர் சிவனின் மீது தீவிர பக்தி கொண்டவர். எப்போதும் சிவனின் நினைவிலேயே வாழ்ந்தவர்.

Thennadudaya Sivane Potri Lyrics in Tamil:

Thennadudaya Sivane Potri Lyrics in Tamil

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

பாடல் நன்மைகள்:

சிவபெருமானின் இந்த போற்றிகளை தினந்தோறும் கூறி வழிபட்டால் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும். மேலும் இதனை வியாழக்கிழமைகளில் குளித்து விட்டு உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு தெற்கு திசையை பார்த்தவாறு இருக்கும் தட்சிணாமூர்த்தியின் சந்நிதியில் தீப தூபங்கள் ஏற்றி, மந்திரத்தை கூறி வழிபட்டால் தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

 

 

இதையும் படித்து பாருங்கள்👉👉   சரஸ்வதி அஷ்டோத்திரம்

அனுமன் 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement