These Lucky Zodiac Sign Will Get Married in 2025 New Year in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வருடமும் புதிய புத்தாண்டு வரும்போது, நம் கனவுகள் இந்த ஆண்டாவது நிறைவேறுமா.? என்ற ஏக்கத்துடன் தான் புத்தாண்டை வரவேற்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கனவுகளும் ஏக்கங்களும் இருக்கும். பண கஷ்டத்தில் இருந்து மீண்டு ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டும். புதிய வீடு கட்ட வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் மேம்பட வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும் என்று இப்படி பல கனவுகள் இருக்கிறது.
ஆனால், இவை அனைத்தும் அனைவருக்கும் கிடைக்குமா என்றால் கிடைக்காது. அதற்கென்று ஒரு நேரம் காலம் வர வேண்டும். குறிப்பாக நம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை பொறுத்தே ஒவ்வொன்றும் நடக்கும். அவற்றில் முக்கியமானது திருமணம். அந்த வகையில், இந்த ஆண்டு அதிகமாக எந்த ராசிக்கு திருமணம் கைகூடி வரும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 2025 புத்தாண்டு ராசிபலன்கள்.!
2025 New Year Marriage Zodiac Signs Tamil | 2025 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற அதிக வாய்ப்புள்ள ராசிகள்.!
ரிஷப ராசி:
2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. திருமணம் முயற்சியில் உள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல செய்தி வரும். குருவின் பெயர்ச்சி குடும்ப ஸ்தானத்தில் அமர்வதால், திருமணம் பாக்கியம் கிட்டும். காதல் செய்துகொண்டிருக்கும் ரிஷப ராசிககாரர்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களின் அனுமதியுடன் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், நீண்ட நாட்களாக வரன் அமையாமல் ஜாதகம் பொருத்தம் இல்லாமலும் இருந்து வந்தவர்களுக்கு இந்த ஆண்டு ஜாதகம் ஒத்துப்போகும்.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் காதல் மற்றும் திருமணம் இரண்டும் கைகூடி வரும். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் முயற்சியில் இறங்கினால் நல்ல வரன் அமையும். காதல் உறவில் உள்ளவர்களுக்கு ஸ்த்திர தன்மையுடன் இருப்பீர்கள். ராகு கேதுவின் பெயர்ச்சியினால் உங்களுக்கு திருமண உறவில் உள்ள தவறான புரிதல்கள் நீங்கும்.
விருச்சிக ராசி:
2025 ஆம் ஆண்டு விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. திருமணம் மற்றும் காதல் உறவில் நல்ல புரிதல் உருவாகும். மே மாதத்தில் நடக்கக்கூடிய குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சியினால் உங்கள் வாழ்வில் அனைத்தும் நன்றாகவே நாடாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு, செவ்வாய் மற்றும் குருவின் அமைப்பால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தனுசு ராசியின் அதிபதி ஆன குருவின் பார்வை நேரடி பார்வை, உங்கள் ராசியின் மீது விழுவதால் திருமணம் கைகூடி வரும். திருமண முயற்சியில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |