நவபஞ்சம ராஜயோகம்
வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் பலருக்கும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது. அப்படி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் எதை செய்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு ராசிக்கும் 3 நட்சத்திரங்கள் இருக்கிறது அல்லவா..! அதுபோல கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருப்பதில்லை. ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறது. அப்படி பெயர்ச்சிக்கும் போது சில ராசிகளுக்கு நன்மைகளை அள்ளித்தரும். அந்த வகையில் இன்று நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க..!
சித்ரா பெளர்ணமி அன்று சந்திர கிரகணம்.. இந்த 5 ராசிக்கு கடும் ஆபத்து
நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு..!
இந்த மே மாதம் உருவாகவுள்ள யோகங்களில் முக்கியமானது நவபஞ்சம ராஜயோகம். இந்த ராஜயோகமானது மே 6 ஆம் தேதி உருவாக போகிறது. அதனால் இந்த நேரத்தில் சுக்கிர பகவான் மிதுன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் இருப்பார்கள்.
சுக்கிரன், சனி இருவரும் நண்பர்கள் என்பதால் இந்த நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிக நன்மைகள் கிடைக்க போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மிதுன ராசி:

சுக்கிரன் மற்றும் சனி பகவான் இருவரும் சேர்ந்து உருவாகும் இந்த நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. சனி பகவானின் ஆதரவு உங்களுக்கு தான். அதனால் இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களிடம் காணப்படும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் எதை தொட்டாலும் உங்களுக்கு வெற்றி தான்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிங்கப்பல் உள்ளவர்களின் குணங்கள் எப்படி இருக்கும்
மேஷ ராசி:

மே மாதம் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித்தர போகிறது. உங்கள் குடும்பத்தில் இருப்பவரின் முழு ஆதரவும் உங்களுக்கு தான். நீங்கள் கொடுத்த கடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். பணவரவு மழையாக பொழியும் நேரம் இது. இந்த நேரத்தில் துணிச்சலுடனும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
ரிஷப ராசி:

சனி, சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு எண்ணற்ற பலன்களை வழங்க போகிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் உங்களை தேடி வரப்போகிறது. வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குருபகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கபோகிறார்..
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












