குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா..

Advertisement

குரு வக்ர பெயர்ச்சி 2023

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட காலத்திற்க்கு தங்களின் ராசியை மாற்றி கொள்வார்கள். இந்த கிரகங்களின் மாற்றமானது எல்லா ராசியிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே நன்மையை அள்ளி தருகிறது. சூரிய குடும்பத்தில் குரு தான் மிகப்பெரிய கிரகமாக இருக்கிறார். குரு என்று அழைக்கப்படும் வியாழன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்து  இப்போது அது வக்ர பெயர்ச்சி அடைய போகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ள இந்த குரு வக்ர பெயர்ச்சி காரணத்தால் யாருக்கெல்லாம் நன்மைகளை அள்ளி தர போகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

குரு வக்ர பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்:

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைய போகிறார். இந்த வக்ர பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் காதல் வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள். இதுவரை குழந்தை இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். மேலும் நீங்கள் சொத்து அல்லது புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரத்தில் நீங்கள் வாங்கலாம்.

ஆகஸ்ட் மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை டாப் கியரில் செல்ல போகுது

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். பிள்ளைகளால் நல்ல செய்தி கிடைக்கும். இதுவரையில் உங்களுக்கு ஏதும் தடைபட்ட வேலைகள் நின்றிருந்தால் அவை இந்த நேரத்தில் மீண்டும் நடக்க கூடும். வருமானம் அதிகமாக கிடைக்கும், இதனால் பணத்தை பயனுள்ள வகையில் சேமிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு வக்ர பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும். குருவின் வகர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் ஏதும் சட்ட சிக்கல் ஏதும் இருந்தால் அவை இந்த நேரத்தில் தீர்வடையும். பணியில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

சிம்மத்தில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா சூப்பரா மாற போகுது 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement