These Zodiac Signs are Lucky Due to Transit of Sun in Rohini Nakshatra
ஒவ்வொரு கிரங்கங்களின் நிலையை பொறுத்தே ஆன்மீகத்தில் ராசிபலன் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் 12 ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் சில ராசிகளுக்கு பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இந்நிலையில் நேற்று கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் சந்திரனுக்கு பிடித்தமான ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி செய்துள்ளார். எனவே சூரியனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். ஓகே வாருங்கள் சூரியனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
சூரியனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்:
சிம்ம ராசி:
சிம்ம ராசியின் 10-வது வீட்டில் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல சூழ்நிலைகள் உருவாகும். மேலும் அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
வக்ர சனி வாரி வழங்கும் பலன்…இந்த ராசிக்காரவங்க உங்களுடைய அதிர்ஷ்டத்தை வாங்க தயாராகிக்கோங்க..
மேஷ ராசி:
சூரியனின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் இக்காலத்தில் உங்கள் எதிரிகளை வெல்வதற்கான வாய்ப்புகளும் கிட்டும்.
கடக ராசி:
சூரியன் பெயர்ச்சி கடக ராசியின் 11-ஆம் வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் புதிய தொழில் தொடங்குவதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கிறது. இதனால் உங்கள் ஆளுமை வலுவடைய தொடங்கும்.
ரிஷப ராசி:
சூரியனின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பெறுவீர்கள். நீங்கள் செய்ய நினைத்த அனைத்து காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். எனவே நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு ஏற்ற நற்பலன்களை பெறுவீர்கள்.
தனுசு ராசி:
தனுசு ராசியின் 11-வது வீட்டில் சூரியன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மேலும் உங்கள் பேச்சை கேட்காதவர்கள் இனி கேட்க தொடங்குவார்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு இது நல்ல நேரமாக இருக்கிறது.
இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.. உங்கவிட்டு வாசல்கிட்ட அதிர்ஷ்டம் நிற்கிறது..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |