தமிழ் புத்தாண்டு 2024
நாம் எப்போதும் தினமும் காலையில் எழும்பும் போது அன்றைய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்ற மனதில் கடவுளை நினைத்து கொண்டு தான் கண் விழிப்போம். அதோடு மட்டும் இல்லாமல் அன்றைய நாளிற்கான பலன்கள் எப்படி இருக்கிறது என்று செய்தி தாள் அல்லது தொலைக்காட்சியில் ராசி பலனை பார்க்கும் பழக்கமும் இருந்து வருகிறது. இவ்வாறு நாம் ஒரு நாளை நல்ல நாளாக இருக்க வேண்டும் செய்யும் பட்சத்தில் ஒரு வருடத்தின் முதல் நாள் அன்று சில என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் இன்று தமிழ் புத்தாண்டு அன்று நாம் என்ன மாதிரியான செயல்களை எல்லாம் மறந்தும் கூட செய்யக்கூடாது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
தமிழ் புத்தாண்டு அன்று செய்யக்கூடாதவை:
ஒரு வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் 1-ஆம் தேதி ஆனது தமிழர்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு நாம் சிறப்புமிக்க ஒரு நாளாக தமிழ் புத்தாண்டினை கொண்டாடும் போது சில செயல்களை செய்யக் கூடாது. அது என்னென்ன செயல் என்றால்..
தமிழ் வருடப்பிறப்பு அன்று முடி வெட்டுதல், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தல், வீட்டில் ஒட்டடை அடித்தல் போன்ற செயல்களை செய்யாமல் இருத்தல் வேண்டும்.
அதோடு மட்டும் இல்லாமல் அத்தகைய நாளன்று மறந்து கூட கை மற்றும் கால்களில் உள்ள விரலங்களின் நகத்தினை வெட்ட கூடாது. மறுநாள் வேண்டுமானால் நகத்தை வெட்டி கொள்ளலாம். ஆகையால் அன்று மறந்து கூட இத்தகைய செயலை செய்யாதீர்கள்.
மேலும் சித்திரை மாதம் 1-ஆம் தேதி அன்று பிறரிடம் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது போன்ற செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் வருடத்தின் முதல் நாளன்று இதுபோன்ற செயலினை செய்யும் போது அந்த வருடம் முழுவதும் இதுபோன்ற செயல்கள் நடைபெறும் என்றும் ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
ஆகாயல் சித்திரம் மாதம் 1-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு அன்று மறந்தும் கூட மேலே சொல்லப்பட்டுள்ள செயலை செய்யாதீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இந்த 3 பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |