Things To Buy on Adi 18 To Increase Wealth
தமிழ் மாதங்களில் மற்ற மாதங்களை விட ஆடி மதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அதிலும், குறிப்பாக ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி 18 ஆம் தேதியன்று, நீரின் ஆதாரமாக விளங்கும் காவிரி தாயினை வணங்கும் வகையில் ஏறி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று வழிபடுவது வழக்கம். எனவே, அன்றைய தினத்தில் வீட்டின் பூஜை அறையில் கிழே சொல்லக்கூடிய இந்த 5 பொருட்களை நாம் வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே, செல்வம் பெறுக ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
செல்வம் செழிக்க ஆடி 18 அன்று வாங்க வேண்டியவை:
ஆடிப்பெருக்கு அன்று, வீட்டில் செல்வம் பெருக வெள்ளி அல்லது தங்க நகைகளை வாங்கி வழிபடுவது வழக்கம். ஏனென்றால் ஆடிப்பெருக்கு அன்று எந்தப்பொருட்களை வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.
ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை வாங்க முடியாதவர்கள் வீட்டில் செல்வம் செழிக்க இந்த 5 பொருட்களை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிப்படுவதன் மூலம் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
கடன் தொல்லை தீர ஆடி முதல் நாள் உப்பு ஜாடியில் இதை மட்டும் மறைத்து வையுங்கள்.!
கல் உப்பு:
மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படும் கல் உப்பினை ஆடிப்பெருக்கு அன்று வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.
மஞ்சள்:
மஞ்சள் என்றாலே மங்களகரமான பொருள் என்று அனைவருக்கும் தெரியும். அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதலிடத்தில் இருப்பது மஞ்சள் தான். எனவே, ஆடிப்பெருக்கு அன்று மஞ்சளை மறக்காமல் வாங்கி வழிபடுங்கள்.
வெல்லம்:
ஆடி 18 அன்று மற்ற பொருட்களுடன் வெல்லத்தினையும் வாங்கி வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அரிசி மற்றும் பருப்பு:
நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் அரிசியினையும் பருப்பினையும் ஆடிப்பெருக்கு அன்று வாங்கி வைப்பதன் மூலம் வறுமை நிலை இல்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
ஆடி முதல் அமாவசை அன்று இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |