செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். புத்தாண்டு அன்று நாம் சில விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பும், அதிர்ஷ்டமும், மஹாலக்ஷ்மி கடாட்சமும் உண்டாகும். ஆகையால், புத்தாண்டு அன்று அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையில் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களில் 2024 ஆண்டு பிறக்கப்போகிறது. அதாவது, ஜனவரி 01.01.2024 வருகின்ற திங்கட்கிழமை வருகிறது. அந்நாளில் கோவிலுக்கு செல்வது, தானம் செய்வது, புது ஆடை அணிவது மற்றும் வீட்டிற்கு சில பொருட்களை வாங்குவது என பற்றவற்றை செய்வதன் மூலம் நற்பலன்களை பெறமுடியும்.
பொதுவாக, பெரும்பாலான வீடுகளில் எதிர்மைறையான எண்ணங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதனால், வீட்டில் அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. முக்கியமாக, குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. இவை அனைத்திற்கும் தீர்வு கடவுள் வழிபாடு ஒன்றே ஆகும். கடவுளுக்கு உரிய பொருட்களை வாங்கி வழிபடுவதன் மூலம் வீட்டில் நேர்மைறை ஆற்றல் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் உண்டாகும்.
புத்தாண்டு அன்று வாங்க வேண்டிய மூன்று முக்கியமான பொருள்:
- துளசி இலை
- ஏலக்காய்
- கல் உப்பு
துளசி இலை, ஏலக்காய், கல் உப்பு ஆகிய மூன்றும் மஹாலக்ஷ்மியின் அம்சம். ஆகையால், வருடத்தின் முதல் நாள் அன்று மேற்கூறிய மூன்று பொருட்களை வாங்குவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். துளசி இலையை வாங்கி வந்து பூஜை அறையில் பெருமாளுக்கும், ஆண்டாளுக்கு வைத்து வழிபட வேண்டும். அடுத்து, ஏலக்காய் வாங்கி வந்து பூஜை அறையில் விளக்கின் அருகில் வைத்து வழிபட வேண்டும். செல்வ செழிப்பு உண்டாக்குவதில் கல் உப்பு முக்கியான பொருள் ஆகும். ஆகையால், கல் உப்பை வாங்கி கட்டாயமாக பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.
ஜனவரி 1 -ஆம் தேதி மறந்தும் உங்கள் வீட்டுக்காக இந்த பொருட்களை மட்டும் வாங்கிவிடாதீர்கள்..!
வாங்க வேண்டிய பிற பொருட்கள்:
- மல்லிகை பூ
- மஞ்சள் குங்குமம்
- சர்க்கரை
- இனிப்பு பலகாரம்
- பசும்பால்
- குத்துவிளக்கு
புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்.?
புத்தாண்டு அன்று அதிகாலை எழுந்து குளித்து பிரம்மமுகூர்தத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அடுத்து, கோவிலுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து தரிசனம் செய்ய வேண்டும். முக்கியமாக, புத்தாண்டு அன்று ஏழை எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும், அறுசுவை உணவுகளை சமைத்து கடவுளுக்கு படையலிட்டு வழிபடுவது நல்லது.
புத்தாண்டு அன்று என்ன செய்ய கூடாது.?
புத்தாண்டு அன்று பிறருக்கு கடன் தரக்கூடாது. நல்ல நாட்கள் மற்றும் விசேஷக நாட்களில் பிறருக்கு கடன் கொடுப்பதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டம் குறையும். ஆகையால், சுப நாட்களில் பிறருக்கு கடன் அளிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |