Things to Consider When Looking For a Rental Home
பொதுவாக நாம் செய்யும் ஒவ்வொன்றையும் சாஸ்திரத்தின்படி செய்வது வழக்கம். அப்படி சாஸ்திரத்தின்படி வீடு தேடும்போது எப்படிப்பட்ட வீட்டினை பார்க்க வேண்டும்.? என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. வீடு என்பது முறையான அமைப்புடன் இருந்தால் தான் நம் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.
அதாவது, நம் வீட்டில் தொடர்ந்து கஷ்டம், பிரச்சனை போன்றவை ஏற்பட்டு கொண்டே இருந்தால் அதற்கு வீட்டின் வாஸ்து சரியில்லை என்று கூறுவார்கள். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் சொந்தமாக வீடு வாங்கும்போதும் வாடகை வீடு தேடும்போதும் அல்லது மனை வாங்கும்போதும் முக்கியமாக சில விஷயங்களை கவனித்து அதன்பிறகே வாங்க வேண்டும். ஆகையால், வீடு தேடும்போது என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவை
வீடு தேடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- நீங்கள் பார்க்கும் வீடு முச்சந்தி வீடாக இருக்கக்கூடாது. அதாவது, வீட்டின் எதிர்பக்கம், வலது பக்கம் மற்றும் இடதுபக்கம் தெருக்கள் மூன்றும் ஒன்று சேர்ந்தவாறு இருக்கக்கூடாது. முச்சந்தி வீடு அவ்வளவு நல்லதல்ல.
- வீட்டிற்கு எதிரில் நெருக்கள் இருக்க கூடாது. மேலும், வீட்டிற்கு எதிரில் குட்டிச்சுவர் எதுவும் இருக்கக்கூடாது.
- நம் வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டின் நிலைவாசலும் நம் வீட்டு வாசலும் நேர் எதிராக எதிராக இருக்கக்கூடாது.
- தெரு வாசலின் உயரத்தை விட உள் வாசலின் உயரம் குறைவாக இருக்கக்கூடாது. அதாவது, வீட்டிற்குள் ஒரு படி இறங்கிப்போவது போல் இருக்கக்கூடாது.
- வீட்டு பாத்ரூம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் பாத்ரூம் இருக்கக்கூடாது.
- வீட்டிற்கு முன் பக்கத்தில் முருங்கை மரம் இருக்கக்கூடாது. மேலும், வீட்டின் முன்பக்கத்தில் பட்டுப்போன மரங்களும் இருக்கக்கூடாது.
- தண்ணீர் கசியும் வீடுகளாக இருக்கக்கூடாது.
- வீட்டின் பூஜை வடகிழக்கு மூலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வீட்டின் கதவுகள் அனைத்தும் உள்நோக்கி திறக்குமாறு இருக்க வேண்டும்.
- வாடகை வீட்டிற்கு சென்றவுடன் வீட்டின் நிலைவாசலில் விநாயகர் படத்தை வைக்க வேண்டும்.
வீடு, நிலம் மற்றும் சொத்து போன்றவை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |