தமிழ் வருடப்பிறப்பு அன்று இதை மட்டும் கட்டாயம் செஞ்சிடுங்க..

Advertisement

தமிழ் வருடப்பிறப்பு 2024

நாம் இரவு தூங்கி எழுந்த பிறகு மறுநாள் காலையில் அன்றைய நாள் நல்ல பொழுதாக அமைய வேண்டும் என்று தான்  நினைப்போம். அது போல் வருடத்தில் முதல் நாள் என்றால் அந்த  வருடம் முழுவதும் நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். சில நல்ல காரியங்கள் நடக்கும் பொழுதும் இந்த விஷயம் செய்ய வேண்டும், செய்ய கூடாதவை என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அதனால் இன்றைய பதிவில் தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் வருட பிறப்பு அன்று செய்ய வேண்டியவை:

கோலம் போட வேண்டும்:

தமிழ் வருட பிறப்பு அன்று செய்ய வேண்டியவை

தமிழ் வருடப்பிறப்பு அன்று காலை எழுந்து வாசலில் கோலமிட்டு குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வது நல்லது.

பூஜை செய்ய வேண்டும்:

தமிழ் வருட பிறப்பு அன்று செய்ய வேண்டியவை

அடுத்து பூஜை அறையில் மா,பலா, வாழை மற்றும் வெற்றிலை சீவல், நகை மற்றும் நெல் போன்றவை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அறுசுவை உணவு சுவை:

தமிழ் வருட பிறப்பு அன்று செய்ய வேண்டியவை

 தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவை உணவான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம், உவர்ப்பு போன்ற சுவைகள் இருக்குமாறு சமைக்க வேண்டும். எதற்காக இப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்றால் இந்த அறுசுவைகளும் கலந்து தான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது.  

தானம் கொடுக்க வேண்டும்:

தமிழ் வருட பிறப்பு அன்று செய்ய வேண்டியவை

நீங்கள் தமிழ் புத்தாண்டு அன்று தானம் கொடுப்பது சிறந்தது. அதில் குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் போன்றவை செய்யலாம்.

குளிர்ச்சி நிறைந்த பழங்களை தானம் கொடுத்தாலும் சரி, நீங்கள் சாப்பிட்டாலும் சரி நல்லது.

மேலும் நாளை உப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றை வாங்குவது குடும்பத்தில் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கும், பணவரவும் அதிகரிக்கும். மேலு அன்றைய தினம் நீங்கள் நகை வாங்கினாலும் செல்வ செழிப்போடும், ஆபரணங்களும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்ய கூடாதவை:

 வீட்டில் நகத்தை வெட்ட கூடாது, முடிகளையும் வெட்ட கூடாது, அசைவ உணவுகள் சாப்பிட கூடாது.  வீட்டில் உள்ள பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. அது போல கடன் வாங்கவும் கூடாது, கடன் கொடுக்கவும் கூடாது.  

மேல் கூறப்பட்டுள்ளவையை நாளைய தினம் கடைபிடித்து இந்த வருடம் ஆரோக்கியத்துடனும், செல்வ செழிப்போடும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாழ்த்துகிறோம். 

      அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement