அதிர்ஷ்டம் உண்டாக பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கியமான பொருட்கள்

Advertisement

5 Things to Keep in Pooja Room in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். வீட்டில் பூஜை அறையில் இருக்கக்கூடிய பொருட்கள் பற்றி பார்க்கலாம். அதாவது, வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாக பூஜை அறையில் வைக்கக்கூடிய பொருட்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக நாம் அனைவருக்குமே வீட்டில் எப்போதும் அதிர்ஷ்டம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இருந்தாலும், அதற்க்கு மாறாக தான் வீட்டில் அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. ஆகையால், வீட்டில் அதிர்ஷ்டத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்பதை ஆராய்ந்து கொண்டிருப்போம். ஆகையால், இப்பதிவின் வாயிலாக அதிர்ஷ்டம் உண்டாக வீட்டில் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் என்ன என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

பூஜை அறையில் நாம் சில முக்கியமான பொருட்களை வைப்பதன் மூலம் வீட்டில் எப்போது  அதிர்ஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆகையால் அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வீட்டில் தெய்வம் நிறைந்திருக்க பூஜை அறையில் இந்த பொருளை வைய்யுங்க..!

வீட்டில் பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்கள்:

ஒவ்வொரு வீடு பூஜை அறையிலும் ஒவ்வொரு மாதிரியான பொருட்கள் இருக்க கூடும். இவை ஒவ்வொரு நம்பிக்கையின் அடிப்படையில் வைக்கிறார்கள். அப்படி வைக்கும் பொருட்களில் சில பொருட்களை வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • வசம்பு 
  • வெட்டி வேர்
  • ஏலக்காய் 
  • இலவங்கம் 
  • பச்சை கற்பூரம்

 things to keep in pooja room in tamil

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில், ஒரு மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில், வசம்பு 9, வெட்டி வேர் ஒரு கைப்பிடி, ஏலக்காய் 9, இலவங்கம் 9 மற்றும் பச்சை கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து ஒரு முடிச்சு போட்டு அதில் உங்களுடைய குலதெய்வ பெயரினை எழுத வேண்டும். இந்த முடிச்சினை பூஜை அறையில் மேற்பகுதியில் வைத்து வழிப்படுவதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். மேலும், தினமும் பூஜை செய்து முடித்ததும் ஒரு வசம்பினை எடுத்து நெருப்பில் காட்டி அதன் சாம்பலை எடுத்து நெற்றியில் பூசி கொண்டால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement