குழந்தைக்கு பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை..!

Advertisement

குழந்தைக்கு பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை..! Things to look out for when naming a baby..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரினை ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு வைக்க வேண்டுமா? அல்லது எண் கணிதத்தை அடிப்படையாக கொண்டு பெயர் வைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம். பொதுவாக ஒரு வருக்கு வைப்பதும் பெயர் என்பது ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தை பிறந்த 16-வது நாள் அன்று புண்ணியதானம் செய்து அந்த குழந்தைக்கு பெயர் சுட்டுகின்றன. அத்தகைய பெயர் எப்படி இருக்க வேண்டும் என்றால் தெய்வீக பெயராக இருக்க வேண்டும். அந்தவகையில் இறைவனுடைய பெயர், குலதெய்வத்தின் பெயர், முன்னோர்களின் பெயர்கள் என்று இது போன்று நல்ல பெயர்களாக வைக்க வேண்டும்.

அந்த பெயரில் நாம் வைக்க கூடிய பெயர் ஒன்று, கூப்பிடக்கூடிய பெயர் என்று இருக்க கூடாது என்ன பெயர் வைக்கின்றோமோ அந்த பெயரை சொல்லித்தான் அழைக்க வேண்டும். சரி இப்பொழுது ஜாதகப்படி பெயர் வைக்கலாமா? அல்லது எண்கணிதம் முறைப்படி பெயர் வைக்கலாமா என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் 2023

ஜோதிடம்:

ஜோதிடம் என்பது பல ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வரக்கூடிய ஒரு முறை ஆனால் எண் கணிதம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்து. இந்த எண் கணிதம் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தால் கூட சுலபமாக ஒரு மனிதனுடைய ஆயுளில் இருந்து, குணங்கள், வாழ்க்கையில் நடக்க இருக்கும் விஷயங்கள் வரை கணக்கிடக்கூடியதாக அதனை அமைத்துள்ளனர்.

சரி இந்த எண் கணிதம் எதனை அடிப்படையாக கொண்டு நமக்கு கொடுத்துள்ளனர் என்றால் இதுவும் கிரகங்களை அடிப்படியாக கொண்டு தான் நமக்கு கொடுத்துள்ளனர்.

ஆக 1-யில் இருந்து 9 வரை இருக்க கூடிய எண்கள் ஒவொரு கிறதோடு தொடர்புடைய கிரகங்கள் ஆகும். அவற்றில் ஒன்று என்பது சூரியனை குறிக்கும், இரண்டு என்பது சந்திரனை குறிக்கும், மூன்று என்பது குருவை குறிக்கிறது, நான்கு ராகுவை குறிக்கிறது, ஐந்து புதனை குறிக்கிறது, ஆறு சுக்கிரனை குறிக்கிறது, ஏழு கேது, எட்டு சனி, ஒன்பது செவ்வாய் ஆகிய ஒன்பது நவகிரங்களை கிரங்களை இந்த எண்களில் அடக்கி, நவகிரகங்களின் ஆற்றல் இந்த ஒவ்வொரு எண்களிலும் உள்ளது.

ஒன்றில் பெயர் அமைந்தால் அது சூரிய ஆதிக்கத்து உரியவராக இருப்பார்கள். உதாரணத்திற்கு அவர்கள் பிறந்த தேதி, பிறந்த மாதம், அவர்கள் பிறந்த வருடம் இவை அனைத்தையும் கூட்டி கழித்து கடையில் ஒன்று வந்தால் அவர்கள் சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியனை போன்று இருப்பார்கள். அவர்களுக்கு சூரியன் உச்சமாக இருப்பார், உயர் பதவிகளில் சிறந்து விளங்குவார்கள் என்று அனைத்துவிதமான பலன்களையும் இந்த எண் கணிதத்தில் சொல்லலாம். அது தான் நியூமராலஜி.

இருப்பினும் குழந்தைக்கு பெயர் வைப்பதாக இருந்தால் ஜாதகம் முறைப்படி பெயர் வைப்பது தான் மிகவும் சிறந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement