உங்களுடைய நண்பர்களுக்கு வாஸ்துப்படி இந்த பொருளை மட்டும் பரிசாக கொடுக்காதீர்கள்…!

Advertisement

வாஸ்து படி பரிசு 

வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! வாழ்க்கையில் நண்பர்கள் இல்லாத மனிதர்களே கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நண்பர்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும் காலகட்டத்தில் நமக்கு எதாவது ஒரு உதவி வேண்டும் என்றால் உடனே யாரிடம் கேட்கலாம் என்று யாரும் யோசிப்பதில்லை. நமக்கு உதவி செய்ய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து பெருமைப்படும் நவீன உலகமாகிற்று. அப்படி இருக்கும் நண்பர்களுக்கும் பிறந்தநாள், திருமணம், திருமண நாள் இதுபோல இன்னும் சில சுபகாரியங்களுக்கு பரிசளிப்பது வழக்கம். அப்படி பரிசு அளிக்கும் போது ஒரு சில பொருட்களை நீங்கள் மறந்தும் கூட பரிசாக கொடுக்க கூடாது சென்று வாஸ்துப்படி சொல்கிறார்கள். அது என்னென்ன பொருட்கள் என்று பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ நண்பர்களின் வெற்றியை கண்டு இந்த ராசிக்காரர்கள்              பொறாமை படுவார்களாம்..!

வாஸ்து படி பரிசாக கொடுக்க கூடாத பொருட்கள்: 

வாஸ்து படி பரிசாக கொடுக்க கூடாத பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கர்சீஃப்:

kercheif uses in tamil

உங்களுடைய நண்பர்களுக்கு கர்சீஃபை பரிசாக கொடுக்கக்கூடாது. ஏனென்றால் அந்த கர்சீஃபை நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒன்று கண்களில் வரும் கண்ணீரை துடைக்க பயன்படுத்துவது. அவ்வாறு இந்த கர்சீஃபை பரிசாக கொடுத்தால் அந்த பரிசினை வாங்கும் நபரின் கண்ணீரை வற்றச்செய்யும் என்று வாஸ்துப்படி சொல்லப்படுகிறது.

கைக்கடிகாரம் வாட்ச்:

watch gift vastu in tamil

உங்களுடைய நண்பர்கள், காதலன், காதலி, கணவன், மனைவி யாராக இருந்தாலும் அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்தால் அவர்களின் ஆயுட்காலம் குறையும் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கத்தரிக்கோல்:

scissor uses in tamil

கத்தி, கத்தரிக்கோல் இதுபோன்ற கூர்மையான ஆயுதங்களை உங்களுடன் நெருங்கி பழகும் நபர்களுக்கு பரிசாக கொடுக்காதீர்கள். அப்படி இதுபோன்ற பொருட்களை பரிசாக கொடுக்கும் போது அது உறவின் பிரிவுக்கு காரணமாக இருக்கும் என்று வாஸ்து படி கூறுகிறார்கள்.

மீன் தொட்டி வாஸ்து:

fish tank vastu in tamil

உங்களுடைய நண்பர்களுக்கு மீன் தொட்டி, நீர் தொட்டி, மீன்கள், தண்ணீர் பாட்டில்கள் இதுபோன்ற நீர் சார்ந்த பொருள்களை பரிசாக கொடுக்கக்கூடாது. ஏனென்றல் அது இந்த பரிசுகளை வாங்கும் நபரின் அதிர்ஷ்டத்தை குறைக்கும் என்று வாஸ்து சாத்திரத்தில் சொல்கிறார்கள்.

செல்லப்பிராணிகள்:

செல்லப்பிராணி நாய்

உயிர் உள்ள எந்த செல்லப்பிராணியும் உங்களுடைய நண்பர்களுக்கு பரிசாக கொடுக்காதீர்கள். அப்படி பரிசாக கொடுத்தால் அது அவரின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்று வாஸ்துவில் கூறுகிறார்கள்.

புத்தகங்கள் பரிசு:

book gift for birthday in tamil

உங்களுடைய நண்பர்களுக்கு காதல் புத்தகங்களை ஒருபோதும் பரிசாக கொடுக்காதீர்கள். இதுபோன்ற புத்தகங்களை பரிசாக அளிக்கும் போது அது உங்களுடைய நட்பு உறவினை பாதிக்கும் என்று வாஸ்துப்படி சொல்லப்படுகிறது.

பரிசு பெற்றது:

பரிசு பெற்றது

நீங்கள் வேறு ஒரு நபரிடம் பரிசாக பெற்ற பொருளை உங்களுடைய நெருங்கிய நண்பர்களுக்கு அந்த பழைய பரிசினை கொடுக்கக்கூடாது. அப்படி அந்த பொருளை பரிசாக கொடுத்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டத்தை விட்டு கொடுத்ததற்கு  ஈடாகும் என்று வாஸ்து படி சொல்கிறார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement