திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்

Advertisement

Thiruchendur Murugan Temple Pooja Timings

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை உள்ளன. இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும், திருச்செந்தூர் கோயில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது. அதுமட்டுமல்லாது திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில். கோயில் காலை 5 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 9 கால பூஜை நடைபெறுகிறது.

இந்த தை மாதத்தில் முருகனுக்கு மிகவும் சிறப்புக்கு உரியதாக இருக்கிறது. ஏனென்றால் தை மாதத்தில் தைப்பூசம் வருகிறது. இந்நாளில் முருகனுக்கு விரதம் இருந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். மேலும் முருகன் கோவிலுக்கு சென்று வருவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் அந்த திருச்செந்தூர் நேரங்களை, நடை சாற்றும் நேரம் போன்ற தகவல்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்:

பூஜை நேரம் பூஜை விபரம்
காலை 5.10 சுப்ரபாதம்- திருப்பள்ளி எழுச்சி
5.30 விசுவரூப தரிசனம்
5.45 கொடிமர நமஸ்காரம்.
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 உதயமார்த்தாண்ட தீபாராதனை
8.00 காலசந்தி தீபாராதனை
10.00 கலச பூசை
10.30 உச்சிக்கால அபிஷேகம்
பகல் 12.00 உச்சிக்கால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்சை பூசை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தசாம பூசை
8.30 ஏகாந்த சேவை
8.45 இரகசிய தீபாராதனை, பள்ளியறை பூஜை
9.00 நடைதிருக்காப்பிடுதல்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூஜையில் வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் வீணாக்கினால் வீட்டில் வறுமை வந்துகொண்டே இருக்கும்

நடை சாற்றும் நேரம்:

அதிகாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்து இருக்கும். திருவிழா காலங்களில் நடைதிறப்பு நேரம் மாறுதலுக்குட்பட்டது.

1) மார்கழி மாதம் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
2) வைகாசி விசாகம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
3) மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா காலத்தில் முதல் திருவிழா, ஏழாம் திருவிழா அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் இதர நாட்களில் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
4) கந்தசஷ்டி திருவிழாவின் போது ஒன்றாம் திருவிழா மற்றும் ஆறாம் திருவிழா அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
5) தை பூசம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
6) பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழனி முருகனுக்கு செய்யும் அலங்காரம் மற்றும் அதனுடைய நேரம் தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement