திருக்கார்த்திகை அன்று எத்தனை விளக்கு எந்த முறையில் ஏற்ற வேண்டும் தெரியுமா..?

Advertisement

திருக்கார்த்திகை தீபம் 2023

கார்த்திகை மாதத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் ஆன்மீக ரீதியாக கொண்டாப்படுகிறது. அதாவது கார்த்திகை சோமவாரம் மற்றும் திருக்கார்த்திகை தீபம் என இந்த இரண்டும் மிகவும் சிறப்பானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்த்திகை சோமவாரம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். ஆனால் திருக்கார்த்திகை தீபம் வருடா வருடம் மாறி மாறி தான் வரும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான கார்த்திகை தீபம் நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அன்று வருகிறது. ஆகவே இத்தகைய திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது என்றும், எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் தான் பார்க்கப்போகிறோம்.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:

கார்த்திகை அன்று அகல் விளக்குகளில் தான் அதுவும் நல்லெண்ணெயில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். அதேபோல் அகல் விளக்கிற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் பொட்டு வைக்க வேண்டும்.

அதேபோல அகல் விளக்கிற்கு அடியில் வெற்றிலை அல்லது வாழை இலை என இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். மேலும் வீட்டு வாசலில் இருந்து விளக்கு ஏற்ற வேண்டும்.

திருக்கார்த்திகை தீபம் 2023

  • திண்ணை- 4
  • சாமிபடம்- 2
  • சமையல் அறை- 1
  • வீட்டின் ஹால்- 2
  • நிலைவாசல்- 4
  • வாசல் கோலம்- 4
  • பின் வாசல்- 4
  • வீட்டு மாடம்-

இத்தகைய இடங்களில் கட்டாயமாக விளக்கு ஏற்ற வேண்டும். இவை இல்லாமல் வேறு இடத்தில் உங்களது விருப்படி எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம்.

மேலும் குறைந்தபட்சம் 9 விளக்கு முதல் அதிகப்பட்சகமாக 27 விளக்கு திருக்கார்த்திகை அன்று ஏற்ற வேண்டும். அதேபோல் கார்த்திகை தீபம் அன்று காலையில் குளித்து விட்டு முருகப்பெருமானை நினைத்து வழிபட வேண்டும்.

பின்பு மாலை எல்லாம் அல்ல சிவபெருமானை நினைத்து திருவிளக்கு ஏற்றி வாழ்க்கையில் உள்ள இருள்கள் அனைத்தும் நீங்கி பிரகாசம் உண்டாக வேண்டும் என்று மனதார பூஜை செய்யுங்கள்.

பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement