சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? | ஜாதக பொருத்தம்

திருமண பொருத்தம்

சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி (Thirumana Porutham In Tamil)

முக்கிய திருமண பொருத்தம்/ பெயர் பொருத்தம்: திருமணம் என்பது இரண்டு மனங்கள் சங்கமிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இரண்டு குடும்பங்கள் இணையும் நிகழ்வு. ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். வேறுபட்ட வாழ்க்கைச் சூழலில் பிறந்து வளர்ந்த இருவர் ஒருமித்த கருத்துடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழச் செய்யும் அற்புதப் பிணைப்பு திருமணம். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த திருமணத்துக்கு வரன் பார்க்கும்போது குடும்பம், வயது, படிப்பு, அழகு ஆகியவற்றுடன் முக்கியமாக ஜாதகமும் பார்ப்பார்கள்.

திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள்

 

ஜாதகம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்யமாட்டார்கள். அதுவும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், திருமணப்பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள். திருமணப் பொருத்தம் (thirumana porutham) பார்க்கும்போது பத்து பொருத்தங்கள் மட்டும் பார்த்தால் போதுமா? திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

முக்கிய திருமண பொருத்தம்(mukkiya thirumana porutham) பார்க்கும் முறை: 

ஜாதக பொருத்தம் தமிழ்: 1    

Jathaka porutham – பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 7– ம் இடம், 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க.

ஜாதக பொருத்தம்: 2

Jathaka porutham – அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும்.

ஜாதகம் பொருத்தம் பார்க்க: 3

Jathaka porutham – அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை அந்தத் தம்பதிக்கு நன்றாக இருக்கும். அதேமாதிரி இரண்டாமிடம்னு சொல்லக்கூடிய தனம், குடும்பம் வாக்குஸ்தானம் நன்றாக பலம் பெற்று இருக்கவேண்டும்.

திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா?

ஜாதக பொருத்தம் (Tamil Jathagam porutham): 4

Jathaka porutham – இதெல்லாம் நன்றாக இருந்தால்தான் காலாகாலத்துல திருமணம் நடந்து மனமொத்த தம்பதியா வாழ்வாங்க.

முக்கிய திருமண பொருத்தம் பார்க்கும் முறை: 

பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு? பார்க்குறது நல்லது.

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன ?

திருமண பொருத்தம் பார்க்கும் முறை: 

அதேபோல் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கின்றது என்று கவலைப்பட தேவையில்லை, இந்தக் காலத்தில் செவ்வாய்தோஷம் இல்லாத ஜாதகம்தான் அபூர்வமா இருக்கு.

அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.

திருமண பொருத்தம் பார்க்கும் முறை: 

நட்சத்திர பொருத்தம்: 1

நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு.

நட்சத்திர பொருத்தம் (Natchathira porutham): 2

ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும்.

அதை விட்டுட்டு, பரணிக்கு பூசம் பொருந்தும், ரோகிணிக்கு மகம் பொருந்தும்னு பொத்தாம் பொதுவா பார்க்கக் கூடாது.

நாக தோஷம் நீங்க பரிகாரம் மற்றும் காரணங்கள்..!

 

நட்சத்திர பொருத்தம்: 3

நட்சத்திரப் பொருத்தம்ங்கிறது ஒரு என்ட்ரி பாயிண்ட். அதாவது அது திருமணப்பொருத்தம் (thirumana porutham) பார்க்கிறதுக்கு ஒரு நுழைவு.

ஆனால், அதுவே முடிவாகி விடாது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு தினம், கணம், ரஜ்ஜூனு பத்துக்கு 7 பொருத்தம் இருக்கு, 8 பொருத்தம் இருக்குன்னு முடிவு பண்ணிடக்கூடாது.

new10 முக்கிய திருமண பொருத்தம்..!

நட்சத்திர பொருத்தம் (Natchathira porutham): 4

முக்கியமா போகஸ்தானமான 3-ம் இடத்தைப் பார்க்கணும். தம்பதி இருவரில் ஒருத்தருக்கு தாம்பத்யத்துல ஆர்வம் இருக்கும். இன்னொருத்தருக்கு ஆர்வம் இருக்காது. இன்னைக்கு பெரும்பாலான விவாகரத்துகளுக்கு இதுதான் காரணம் ஆகுது.

நட்சத்திர பொருத்தம்: 5

இரண்டு பேர் ஜாதகத்துலயும் போகஸ்தானம்ங்கிற 3-ம் இடம் நல்லா இருக்கான்னு பார்க்கணும். திருமண பொருத்தம் (thirumana porutham) பார்க்கும்போது ‘ராசிப் பொருத்தம்’, ‘யோனிப்பொருத்தம்’ இரண்டும் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும்.

முக்கிய திருமண பொருத்தம் / Mukkiya Thirumana Porutham

பார்க்கும்போது பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்காம, ஜாதகருடைய கிரகங்களின் நிலை, தசா புத்தி இதெல்லாம் பார்க்கணும்.

mukkiya thirumana porutham:- அதே மாதிரி சனிதிசை நடக்கிற ஜாதகருக்கு ராகு, கேது, செவ்வாய் திசை நடக்கிற ஜாதகரைச் சேர்க்கக்கூடாது. ராகு திசை நடக்கிறவருக்கு கேது, செவ்வாய், சனி திசை நடக்கிறவரைச் சேர்க்கக்கூடாது.

இப்படி தசா புத்தி நல்லா இருக்கான்னும் பார்க்கணும். இப்படிப் பார்த்து சேர்த்திட்டோம்னா அந்நியோன்யமா இருப்பாங்க.

குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். கடைசி வரைக்கும் அவங்களோட வாழ்க்கை வசந்தமா இருக்கும்.

திருமண பெயர் பொருத்தம் மட்டும் பார்க்க:

திருமண பெயர் பொருத்தம்:- வெறும் பெயர் பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமண பொருத்தம் (thirumana porutham) பார்க்கக்கூடாது. மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

 

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்