Thirumana Thadai Neenga Murugan Manthiram
இப்போது எல்லாம் 40வயது வரைக்கும் திருமணம் ஆகாமல் பலரும் இருக்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆகவில்லை என்று கவலை அடைவதை விட நம்மை சுற்றி உள்ளவர்கள் தான் இன்னும் கல்யாணம் நடக்கலையா வயது எத்தனை என்று கேட்டு கவலை அடைகிறார்கள். அதுமட்டுமில்லாமல் என்ன பிரச்சனை உடலில் ஏதும் பிரச்சனையை, ஜாதகத்தில் ஏதும் பிரச்சனையை என்று கேட்பார்கள். கேட்பது மட்டுமில்லாமல் அதற்கான வழியையும் சொல்வார்கள். இந்த கோவிலுக்கு போ, அந்த கோவிலுக்கு போ என்று கூறுவார்கள்.
இதில் எந்த பயனும் அடையாதவர்கள் மன விரக்தி அடைவார்கள். முருகன் இருக்க பயமேன்.! முருகனை வழிபட்டால் நம் வாழ்க்கையில் சகல பாக்கியங்களும் கிடைக்கும். அதனால் இந்த பதிவில் திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
திருமண தடை நீங்க முருக மந்திரம்:

இந்த முருக மந்திரத்தை 48 நாட்கள் கூற வேண்டும். தொடர்ந்து கூறுவதன் மூலம் திருமண தடை நீங்கும். இந்த மந்திரம் ஆனது அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழ் ஆகும். இந்த மந்திரத்தை திருமணம் ஆகாத காலை மாலை என இரண்டு வேலையும் 6 முறை கூறி 48 நாட்கள் என்று தொடர்ந்து கூறி வந்தால் நல்ல செய்தியானது இந்த 48 நாட்களுக்கும் நடக்கும்.
திருமணம் ஆகாத பெண்கள் அல்லது ஆண்களால் செய்ய முடியவில்லை என்றால் அவர்களுடைய அம்மா இந்த மந்திரத்தை கூறலாம். இந்த பாடலை விளக்கேற்றி இந்த பாடலை 48 நாட்கள் என்று தொடர்ந்து கூறுவதன் மூலம் 48 நாட்களுக்குள் திருமணம் கைகூடி வரும் என்று ஆன்மிகத்தில் கூறியுள்ளது.விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.
மேல் கூறியுள்ள மந்திரத்தை நம்பிக்கையுடன் 48 நாட்கள் கூறி வாருங்கள் திருமண தடை நீங்கி திருமணம் கைகூடி வரும்.
ஓம் முருகா
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












