திருமண தடை நீங்க ஸ்லோகம்

Advertisement

திருமண தடை நீங்க ஸ்லோகம்

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். திருமணம், குழந்தை பேறு இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பலவிதமான மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். பார்க்க கூடியவர்கள் அனைவரும் ஏன் இன்னும் வரன் அமையலயா என்று கேட்டு மனதை புண்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஜாதகத்தை பார்ப்பார்கள். ஒவ்வொரு ஜாதக காரரை பார்த்து இதற்கு ஏதும் பரிகாரம் செய்யலாமா அல்லது ஏதும் கோவிலுக்கு செல்லலாமா என்று கேட்பார்கள்.இதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் திருமண வரன் கிடைக்கும். அவை என்ன மந்திரம் என்று இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் திருமண தடை நீங்க ஸ்லோகம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Thirumana Thadai Neenga Slokam

விதேஹி தேவி கல்யாணம்

விதேஹி விபுலாம் ச்ரியம்

ரூபம் தேஹி ஜயம் தேஹி

யசோ தேஹி திவ்ஷா ஜஷி

பத்னீம் மனோரமாம் தேஹி

மனோவ்ருத்தனு சாரீரம்

தாரீனிம் துர்கஸம்சார

ஸாரசய குலோத்பவாம்

விதேஹி தேவி கல்யாணம்

விதேஹி விபுலாம் ச்ரியம்

ரூபம் தேஹி ஜயம் தேஹி

யசோ தேஹி த்வ்ஷா ஜஷி

திருமண தடை நீங்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய மந்திரம்

ஸ்லோகத்தை உச்சரிக்கும் முறை:

இந்த ஸ்லோகத்தை காலை அல்லது மாலை நேரத்தில் சாமி படத்திற்கு முன் உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து மேல் கூறப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து 48 நாட்கள் சொல்லி வந்தால் திருமண தடை நீங்கும்.

தோஷங்கள்:

தேவ தோஷம், பித்ரு தோஷம், ஷர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், அபிஷார தோஷம், பிரேத சாபம் போன்றவற்றால் தான் திருமண தடை ஏற்படுகிறது. மனதார விரதமிருந்து கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி வந்தால் இந்த ஆறு தோஷங்களும் நீங்கி உங்களுக்கு உடனே திருமணம் நடைபெறும்.

செவ்வாய் தோஷத்தினால் திருமண தடை ஏற்படுகிறது என்றால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement