புதுமண தம்பதிகள் கனவில் வந்தால்
அந்த காலத்தில் உள்ளவர்களும் சரி இந்த காலத்தில் உள்ளவர்களும் சரி கனவு வந்தாலே பயமும் அதிகரிக்கும். இந்த மாதிரி கனவு எதற்காக வந்தது, அதற்கான பலன் என்னவென்று தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். நம்முடைய பதிவில் நிறைய வகையான கனவுகளுக்கு என்ன பலன்கள் என்று பதிவிட்டுள்ளோம்.
ஆன்மிகத்தில் நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் சொல்லப்படுகிறது. மேலும் கனவு என்பது எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன்னதாகவே தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதனால் இந்த பதிவில் திருமணம் பற்றிய கனவுகளை கண்டால் என்ன பலன்கள் என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.
மணமகள் கனவில் வந்தால்:
மணமகள் கனவில் வந்தால் உங்களுக்கு சுப நிகழ்ச்சி, அல்லது சுப செய்திகள் வரும் என்பதை குறிக்கிறது.
பத்திரிக்கை கனவில் வந்தால்:
நீங்கள் பத்திரிகையை கனவில் கண்டால் நீங்கள் முடியும் என்று எதிர்பார்த்த செயல்கள் முடிவதற்கு நேரமாகும். அதனால் அதற்கான முயற்சிகளை கடுமையாக எடுக்க வேண்டும் அர்த்தம்.
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
திருமண கோலத்தில் தம்பதிகளை கனவில் கண்டால்:
திருமண கோலத்தில் இருக்கும் மணப்பெண்களை கனவில் கண்டால் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பெரிய விருந்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால்
பெரிய விருந்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு திருமண தடை ஏதும் இருந்தால் அவை நீங்கி கல்யாண யோகம் கைகூடும் என்பதை குறிக்கிறது.
திருமண நடைபெறுவதை போல் கனவு கண்டால்:
திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் மன அழுத்தம், கவலை, சிறை செல்வதற்கான வாய்ப்புகள் போன்றவை ஏற்படும் என்பதை குறிக்கிறது.
திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால்:
நீங்கள் யாருடைய திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கிடைக்கும்.புதுமண தம்பதிகள் கனவில் வந்தால்:
புதுமண தம்பதிகள் கனவில் வந்தால் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகளாக இருக்கிறது. இந்த சுப நிகழ்ச்சிகள் மூலம் உங்களின் மனதானது மகிழ்ச்சியை அடையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |