திருமணம் எந்த கோவிலில் செய்யலாம், எந்த கோவிலில் செய்ய கூடாது..

Advertisement

திருமணம் செய்ய உகந்த கோவில்கள்

பொதுவாக ஆன்மிகத்தில் திருமணம் செய்வதற்கு கோவில்கள் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் கோவில்களில் திருமணம் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதனால் கோவில்களில் திருமணம் செய்ய விரும்புகின்றனர். இருந்தாலும் என்ன கோவிகளில் திருமணம் செய்யலாம் என்பது பலருக்கும் இருக்கும் கேள்வியாக இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் எந்த கோவில்களில் திருமணம் செய்யலாம். எந்த கோவில்களில் திருமணம் செய்ய கூடாது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்:

திருமணம் செய்ய உகந்த கோவில்கள்

மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் (சிவன்) கோவிலாக இது பிரபலம். திருமணத்திற்கு மிகவும் புனிதமான இடம் என்று நம்பப்படுகிறது.இங்கு திருமணம் செய்தால் மணமக்களின் வாழ்க்கையானது மங்களகரமானதாக கருதப்படும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்:

காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் (சிவன்) கோவில். திருமண வாழ்க்கைக்கு இந்த கோவில் ஏற்றதாக இருக்கிறது. இந்த கோவிலில் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கையானது சீரும் சிறப்புமாக இருக்கும்.

திருக்கண்டியூர் கந்தகோடீஸ்வரர் கோவில்:

இந்த கோவில் ஆனது தஞ்சாவூர் அருகே திருக்கண்டியூர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோவிலில் திருமணம் செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்குமாம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்:

மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் இளம் வயதில் திருமணம் செய்வது இந்த கோவிலில் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்:

கேரளாவிற்கு அருகே திருவனந்தபுரம் விஷ்ணு பத்மநாபசுவாமியாக காட்சியளிக்கும் இக்கோவில் திருமணத்திற்கு மிகவும் புனிதமான இடமாக இருக்கிறது.

திருவேங்கடம் வெங்கடேஸ்வரர் கோவில்:

வெங்கடேஸ்வரர் (விஷ்ணு) கோவிலாக இது பிரபலம். திருமண வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் பெற பலர் இங்கு வருகிறார்கள். இந்த கோவிலில் திருமணம் செய்வது மங்களகரமான விஷயமாக இருக்கிறது.

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்:

இராமநாதசுவாமி (சிவன்) மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் இந்த கோவிலின் பிரபலமாக இருக்கிறது.

சென்னை கபாலீஸ்வரர் கோவில்:

கபாலீஸ்வரர் (சிவன்) மற்றும் காமாட்சி அம்மன் காட்சி தருகிறார்கள். திருமண தடையை நீக்க இந்த கோவிலுக்கு பலரும் வருகிறார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்:

தியாகராஜர் (சிவன்) மற்றும் அல்லியங்கோதை அம்மன் காட்சி தருகிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோவில்:

சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலும் திருமணம் செய்வதற்கு ஏற்ற கோவிலாக இருக்கிறது.

மேல் கூறியுள்ள கோவில்களில் திருமணம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் உங்களின் வசதிக்கு ஏற்ற கோவில்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த கோவிலில் திருமணம் செய்ய கூடாது:

எந்த கோவிலில் திருமணம் செய்ய கூடாது

காளஹஸ்தி கோவில்,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் போன்ற கோவில்கள் சிவபெருமானுக்காக உள்ளது. ஏனென்றால் இந்த கோவிலில் சிவபெருமான் தியான நிலையில் காட்சியளிப்பார்.

திருக்காரியூர் பாலசுப்பிரமணிய சுவாமி முருக பெருமானுக்காக உள்ள திருக்கோயில். இந்த கோவில்களில் முருகன் பிரம்மச்சாரியாக காட்சி அளிப்பார். அதனால் இந்த கோவிலில் திருமணம் செய்தால் உங்களின் திருமண வாழ்க்கையில் தடைகள் ஏற்படலாம்.

திருவேங்கடம் வெங்கடேஸ்வரர் கோவில் விஷ்ணு கோவிலில் திருமணம் செய்ய கூடாது. ஏனென்றால் வெங்கடேஸ்வரர் தனிமையாக இருப்பார்.

சிவன் கோவிலில் திருமணம் செய்யலாமா:

 சிவன் கோவிலில் திருமணம் செய்யலாம். ஆனால் அந்த கோவிலில் சிவன் எப்படி காட்சி அளிக்கிறார் என்பதை பொறுத்து மாறுபடும். தியான நிலையில் காட்சி அளிக்கும் சிவன் கோவிலில் திருமணம் செய்ய கூடாது. 
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement