திருநள்ளாறு சனி பெயர்ச்சி அதிஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகாரர்கள்..!

Advertisement

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – Thirunallar Sani Peyarchi 2023 Palangal in Tamil

ஆன்மிக வாசகர்களுக்கு வணக்கம்.. திருநள்ளாறு சனி பெயர்ச்சி என்பது ஒரு முக்கியத்துவமான ஒன்றாகும். தெய்வங்களை நம்பக்கூடியவர்கள் திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி நடந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். ஏன் என்றால் ஒவ்வொரு வகையான பஞ்சாங்கம் படி ஆண்டு தோறும் சனி பெயர்ச்சி ஆகிறார். அந்த வகையில் திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி என்பது ஆற்காட்டில் உள்ள பாம்பு பஞ்சாங்கம் முறை படி தான் திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சியை கடைபிடிப்பார்கள்.

அந்த வகையில் திருநள்ளாறில் டிசம்பர் 20. 2023 அன்று அதாவது தமிழ் மாதமான மார்கழி  மாலை 5.23 மணி அன்று மகரத்தில் இருந்து கும்பத்திற்கு வக்கிர நிவர்தியாகிறார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆக கும்பத்திற்கு வரும் சனி 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரப்போகிறார், அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்? கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – மேஷம்:

மேஷம் ராசிக்காரர்கள் இந்த கால கட்டத்தில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். தேக ஆரோக்கியத்தில் நரம்பு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த பெயர்ச்சியில் உங்கள் ராசியில் லாபத்தில் வருவதினால் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபம் ஏற்படும். ஆக இந்த கால கட்டத்தில் பழைய கடன்களையெல்லாம் அடைத்துவிடுவீர்கள். சுப காரியங்களில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி, சுமிச்சமாக அந்த அந்த சுப காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாகனம் விஷயங்களில் ஏற்பட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் மேஷம் ராசிக்காரர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த கால கட்டத்தில் தொழில் புதிய தொழிலை தொடங்கலாம். மொத்தத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பெரிய அளவில் அனுகூலங்களை தரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் சிக்கல்.. இதில் உங்கள் ராசி இருக்கிறதா

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் இந்தப்பெயர்ச்சியின் போது ஒரு அனுகூலம் காணப்பட்டாலும், மாற்றம்  என்பது நிச்சயமாக ஏற்படும். அது உத்தியோகத்தில் இருக்கலாம், தொழிலில் இருக்கலாம், வியாபாரமாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம் அவற்றில் ஏதாவது புதிய மாற்றம் ஏற்படும். மேலும் இடம் மாற்றங்கள் கூட ஏற்படலாம். ஆரோக்கியம் பொறுத்தவரை வயிற்று கோளாறு, முதுகு தண்டவாளத்தில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆக அந்த மாற்றத்தை நல்லவிதமாக மாற்றிக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்கள் ராசியில் 10-ஆம் இடத்தில் சனி இருப்பதால் இன்னொரு வேலை அல்லது இன்னொரு படிப்பு கிடைக்கும் வரை இருக்கின்ற பணியை விட்டுவிட வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் படிப்படியாக நல்ல அனுகூலங்கள் கிடைக்க கூடும். இந்த கால கட்டத்தில் சுப காரியங்களில் எந்த ஒரு தடைகளும் ஏற்படாது. திருமணம் ஆகாதவருக்கு திருமண தடை நீங்கி திருமணம் நல்லபடியாக நடந்து முடியும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – மிதுனம்:

மிதுனம்

இதுவரை இருந்து வந்த துயரங்கள் அனைத்தும் நீங்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும், இந்த பெயர்ச்சியில் சனி பகவான் இந்த பெயர்ச்சியின் போது 9-ஆம் இடத்திற்கு வருகிறார். ஆக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள். எல்லாவிதத்திலும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு படிப்படியான முன்னேற்றேம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – கடகம்:

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு தேவையில்லாத பாதிப்புகளை ஏற்படுத்துவார் ஆக கோவத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மே மாதம் வரை கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை இருவருக்குளேயே பேசி தீர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது தொழில் மாற்றம், இடம் மாற்றம், வியாபாரம் மாற்றம், மனை மாற்றம் இது போன்ற அனைத்து மாற்றங்களும் கண்டிப்பாக நிகழும். மன அழுத்தம் ஏற்படும். கணவன் மனைவி உறவுக்குள் பிரச்சனைகள் ஏற்படும். ஆக ஜோடியாக இருக்கும் தெய்வங்களின் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்..!

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – கன்னி:

5-ஆம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்பொழுது உங்கள் ராசியில் 6-ஆம் இடத்திற்கு வருகிறார். இது உங்களுக்கு சத்ருஜெயம் ஆகும். இதனை நாட்கள் உங்களை கேலி செய்தவர்கள் இனி உங்களை கண்டு வியந்துபோவார்கள். எதிர்களினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சுப காரியங்கள், திருமணம், குழந்தை, தொழில், வியாபாரம் இவை அனைத்தும் நிவர்த்தியடையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும். மேலும் மனதில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி உண்டாகும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 4-ஆம் இடத்தில் இருந்து 5-ஆம் இடத்திற்கு நிவர்தியாகிறார். ஆக இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அனைத்து விதத்திலும் நற்பலன்களை வழங்குவார்கள். இருப்பினும் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த பெயர்ச்சியின் முழுமையான பலன்களை பெற சிவன் மற்றும் நரசிம்மர் வழிபாட்டினை மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படி படியாக குறையும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – விருச்சிகம்:

உங்கள் ராசியில் நான்காம் இடத்தில் இருப்பதனால்  அர்த்தாஷ்டம சனி என்பார்கள் ஆக நீங்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக இருக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதனை கண்டுகொள்ளாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. இந்த கால கட்டத்தில் விநாயகர், பைரவர், அனுமன் போன்ற உங்களுக்கு பிடித்த இஷ்ட செய்வதை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – தனுசு:

தனுசு

இதுவரை உங்கள் ராசியில் இரண்டாம் இடத்தில் இருந்த சனி, இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு வருகிறார். இது உங்களுக்கு வாக்கு ஸ்தானம் ஆகும் கண், மூக்கு மற்றும் முகங்களில் கோளாறுகள் இருந்திருந்தால் அவையெல்லாம் இப்பொழுது சரியாகிவிடும். வெளியிடங்களுக்கு போக வேண்டும் என்று நினைத்த விஷயங்கள் இப்பொழுது கைகூடி வரும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பிரச்சனைகள் சரியாகும். தொழில், வியாபாரம் மேலுங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – மகரம்:

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சனியானவர் உங்கள் ராசியில் இருந்து தான் மாறுகிறார் என்பதால் நீங்கள் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உடற் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் ஜெயம், தொழில் முன்னேற்றம், வியாபரம் முன்னேற்றம் காணப்படும். அதேபோல் உங்களுக்குள் இருந்த படபடப்பு குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்து முடியும். குறிப்பாக இந்த கால கட்டத்தில் நீங்கள் தொட்டகாரியம் அனைத்தும் வெற்றி பெரும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். விநாயர் மற்றும் பைரவர் வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன்களை தரும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – கும்பம்:

கும்பம்

கும்பம் ராசிக்காரருக்கும் தான் சனி பகவான் தற்பொழுது வக்கிர நிவர்த்தியடைகிறார். ஆக உங்களுக்கு நற்பலன்களை வருவாங்க இருக்கிறார். இருப்பினும் குடும்பத்தில் சில குழப்பங்களை ஏற்படுத்துவார் என்பதினால் குடும்பத்துடன் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உங்கள் கணவர் அல்லது மனைவி உடலில் சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2023 பலன்கள் – மீனம்:

ஏழரை சனியின் ஆரம்பத்தில் இருக்கும் மீனம் ராசிக்காரர்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த காலத்தில் உங்களுக்கு திருமண அமைப்பு, புத்திரபாக்கியம் அமைப்பு, வீடு வாகனம் வாங்கும் அமைப்பு இது போன்ற மகிழ்ச்சியான அமைப்புகள் உண்டாகும். இருப்பினும் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தொழில் நல்ல அனுகூலம் ஏற்படும், பழைய கடன்களை திருப்பி கொடுத்திடுவீர்கள், நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் ஜெயம் ஏற்படும். தாய் மற்றும் தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும், இருப்பினும் கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் நட்பு விஷயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டும். மீனம் ராசிக்காரர்கள் முடிந்த ஒரு முறை கணபதி ஹோமம் செய்வது மிகவும் நல்லது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement