திருஷ்டி கழிக்க உகந்த நாள் மற்றும் நேரம்.!

Advertisement

Thirusti Kalikka Ugantha Naal

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருஷ்டி கழிக்க உகந்த நாள் மற்றும் நேரம் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. பொதுவாக, திருஷ்டி என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒன்றாக இருக்கிறது. ஒருவர் உயர்ந்தாலோ அல்லது அழகாக இருந்தாலோ கொள்ளை கண் பட்டு திருஷ்டி ஏற்பட்டு விட்டு என்று கூறுவார்கள். திருஷ் என்றால் பார்வை. ‘பார்வை மூலம் ஏற்படும் பாதிப்பே திருஷ்டி’ என்கின்றனர்.

இதனால், தான் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுத்தி போடுவார்கள். ஆனால், இப்போது நமக்கெல்லாம் எப்படி சுத்திப்போடுவது என்றும் எந்த கிழமையில் எந்த நேரத்தில் திருஷ்டி கழிப்பது என்றும் தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் திருஷ்டி கழிக்க உகந்த நாள் மற்றும் உகந்த நேரம் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்..!

திருஷ்டி கழிக்க உகந்த நாள்:

திருஷ்டி கழிக்க உகந்த நாள்

  • அமாவாசை
  • ஞாயிற்றுக்கிழமை 
  • திங்கட்கிழமை
  • செவ்வாய்க்கிழமை 
  • வெள்ளிக்கிழமை 

திருஷ்டி கழிக்க உகந்த நேரம்:

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்கலாம். ஆனால், எல்லோராலும் இந்த நேரத்தில் திருஷ்டி கழிக்க முடியாது. அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம். இந்த மணிக்குள் திருஷ்டி கழிப்பது உகந்தது.

திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பொருட்கள்:

  • கற்பூரம்
  • ஆரத்தி
  • கல் உப்பு
  • மிளகாய்
  • கடுகு
  • தேங்காய்
  • பூசணிக்காய்
  • எலுமிச்சம் பழம்

மேற்கூறிய பொருட்களில் உங்களுக்கு விருப்பமான பொருட்களை வைத்து திருஷ்டி கழிக்கலாம். சிறிய குழந்தைகளுக்கு ஆராத்தி அல்லது கற்பூரம் காட்டி திருஷ்டி கழித்தால் மட்டும் போதுமானது. மிகப்பெரிய திருஷ்டி என்றால் மட்டுமே கல் உப்பு, மிளகாய், பூசணிக்காய், எலுமிச்சை பழம் போன்றவற்றை பயன்படுத்தி  திருஷ்டி கழிக்கலாம்.

கண் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி.?

திருஷ்டி கழித்த உப்பை என்ன செய்ய வேண்டும்.?

திருஷ்டி கழித்த உப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து விட அருகில் உள்ள நீர் நிலைகளில் ஊற்றிவிட வேண்டும். அப்படி இல்லையென்றால், மற்றவர்கள் கால்தடம் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement