வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை  தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்  என்ன தெரியுமா ?

Updated On: November 26, 2025 1:17 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Karthikai Dheebathin Nanmaikal 

இன்றைய பதிவில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பற்றி பார்க்க போகிறோம். தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாள் என்பது தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பழமையானதும், தொண்மையானதும் தீப திருவிழாவாகும். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார். என்பதை விளக்கும். ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை நினைவுகூரும் வகையில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பற்றி பார்க்கலாம் வாங்க…

 திருவண்ணாமலை தீபம்:

 திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப திருவிழா தனி தன்மை வாய்ந்தது. இதற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த தீபத்திற்கு கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்ற பெயர்களும் உண்டு. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் உலகில் பரம்பொருள் ஒன்று என்பதை உணர்த்துகிறது. 

 திருவண்ணாமலை தீபம்:

  •  திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
  • திருவண்ணாமலையை பார்த்து ஓம் நமசிவாய என்று சொன்னால் அந்த மந்திரத்தை மூன்று கோடி முறை உச்சரித்த புண்ணியம் வந்து சேரும்.
  • திருவண்ணமலையின் உச்சியில் தீபம் ஏற்றும்போது மலையின் உள்பகுதியில் ஒலி ஒன்றை கேட்டதாக ரமணர், சேஷாத்ரி கூறியுள்ளனர்.
  • திருவண்ணாமலையில் கார்த்திகை ஏற்றிய பிறகு அதை வணங்கி கிரிவலம் வந்தால் அந்த ஜோதியின் கதிர்கள் உடம்பில் பட்டு ஆன்ம பலம் அதிகரிக்கும்.
  • தீப திருநாளில் 3 முறை கிரிவலம் வரும்போது நாம் செய்யும் பாவங்களில் இருந்து முழு விமோசனம் கிடைக்கும்.
  • தீபம் ஏற்றப்படும்போது தீப மங்கல ஜோதி நமோ நம என்ற பாடலை பாட குடும்பத்தில் மங்களம் உண்டாகும்.
  • கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவருக்கு 1000 அச்சமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை தீபத்தன்று சிவலிங்கம் முன் நெய் விளக்கேற்ற வாழ்க்கை பிரகாசம் ஆகும்.

2025 சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

கார்த்திகை தீபம் :

  • மலையுச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை 2000 லிட்டர் நெய் பிடிக்கும். திருவண்ணாமலை தீபம் சுமார் 20 கீ.மீ தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் 11 நாட்கள் தொடர்ந்து தெரியும்.
  • திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம்’ அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டு கார்த்திகை தீபம், தோட்ட கார்த்திகை தீபம் என 5 வகை தீபங்கள் ஏற்றபடுகிறது.  
  • திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை. பஞ்சபூத தலங்களுக்கு இது நெருப்புக்குரிய தலம். 
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now