திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணமும், வாழ்க்கையும் இப்படி தாங்க இருக்குமாம்..!

Advertisement

Thiruvathirai Natchathiram

ஜோதிடத்தில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் இருக்கிறது. இவ்வாறு இருந்தாலும் கூட ஒவ்வொரு ராசிக்கும் மூன்று நட்சத்திரங்கள் என்பது உள்ளது. அதனால் நாம் அனைவருக்கும் எந்த ராசிக்கு எந்த நட்சத்திரம் என்ற குழப்பம் இருக்கும். அதிலும் சில ராசிகளில் முதல் 2 பாதம் ஒரு ராசியிலும், மற்ற இரண்டு பாதங்கள் வேறு ஒரு ராசியிலும் இருக்கும்.

இத்தனை குழப்பங்கள் அடிப்படையிலும் ஒரு மனிதனின் ராசி மற்றும் நட்சத்திரம் என்பது பிறந்த நேரம், தேதி மற்றும் கிழமை என இவற்றை எல்லாம் அடிப்படையாக தான் கண்டறியப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் குணங்களும், பலன்களும் வேறுபட்டு காணப்படுகிறது. ஆகவே இன்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் ஆன்மீக நண்பர்களே..!

திருவாதிரை நட்சத்திரம் குணங்கள்:

thiruvathirai natchathiram

ஆன்மீகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரமாக காணப்படுவது தான் திருவாதிரை நட்சத்திரம். இத்தகைய நட்சத்திரம் ஆனது மிதுன ராசியின் நட்சத்திரம் ஆகும்.

  • இந்த நட்சத்திரக்கார்கள் அதிக புத்தி கூர்மை உடையதவராகவும், பேச்சுகளில் சிறந்த ஆற்றல் கொண்டவராகவும் இருப்பார்கள். ஆனால் சிறிதளவு முன்கோபம் உள்ளவராக காணப்படுவார்கள்.
  • இவர்கள் அதிகமாக கோபம் கொண்டிருந்தாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக இரக்க குணம் உள்ளவராக இருப்பார்கள்.
  • திருவாதிரை நட்சத்திரக்கார்கள் கடின உழைப்பிற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள். அதேபோல் அத்தகைய உழைப்பிற்கு ஏற்றவாறு வெற்றியினையும் பெற்று விடுவார்கள்.
  • அதுமட்டும் இலலாமல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்யும் செயலில் முடித்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கை உடையவராக திகழ்வார்கள்.
  • நண்பர்களுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பவர்கள்.
  • மேலும் இவர்கள் இடத்திற்கு ஏற்றவாறு பேசும் மற்றும் நடந்து கொள்ளும் குணங்களை உடையவர்கள்.
  • இவர்களுக்கான நிதி தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் அதனை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கு, க, ச, ஞ ஆகிய எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும்.
கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் வாழ்க்கை அம்சம்:

கல்வி:

கல்வியை பொறுத்தவரை இவர்கள் சிறப்பாக படிக்கும் ஆற்றல் உடையவராக இருப்பார்கள். அதேபோல் பிடித்த பாடத்தை எளிய முறையில் கற்று அதிக மதிப்பெண்கள் எடுக்கும் திறமை வாய்ந்தவர்கள்.

திருவாதிரை நட்சத்திரம் தொழில்:

இத்தகைய நட்சத்திரக்கார்கள் பிடித்த வேலையினை செய்து அதில் நல்ல வருமானத்தை பெரும் வலிமை உடையவர்கள். ஆனாலும் இவர்களின் நட்சத்திரத்தின் படி பொருட்களை வாங்குதல் மற்றும் விற்றல், அரசு வேலை அல்லது சொந்தமாக சுயதொழில் செய்வது என்பது தான் ஏற்றதாக கருதப்படுகிறது.

திருவாதிரை நட்சத்திரம் திருமண வாழ்க்கை:

திருமண வாழ்க்கையின் மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டிருந்து அதற்கு ஏற்றவாறு வாழ்வார்கள். அதேபோல் திருமணத்திற்கு பிறகு அதீத பாசத்துடன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பழகுவார்கள். 

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இரத்த அழுத்தம், தொண்டையில் புண், இருமல் மற்றும் ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

அதிர்ஷ்டமான நிறம் மற்றும் கல்:

அதிபதி:

  • ராகு பகவான்.

அதிர்ஷ்டமான நிறம்:

  • அடர் நீலம் மற்றும் கருப்பு இந்த இரண்டும் நிறமும் ஏற்ற நிறமாக உள்ளது.

அதிர்ஷ்டமான எண்:

  • திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 1,4,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமான எண்ணாக உள்ளது.

மந்திரம்:

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்.

ராசி கல்:

  • கோமேதக கல்.

பொருந்தும் நட்சத்திரங்கள்:

  • பூரட்டாதி, உத்திரட்டாதி, அசுவனி, பரணி, மிருகசீரிடம், மூலம், பூராடம், அவிட்டம் 3 மற்றும் 4-ஆம் பாதம் ஆகியவை பெண் நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் ஆகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement