Thiruveezhimizhalai Temple Timings
சில நபர்கள் தினமும் கோவிலுக்கு செல்வார்கள், சில பேர் வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு செல்வார்கள். சில பேர் மனதளவில் கஷ்டமாக இருக்கும் போது கோவிலுக்கு செல்வார்கள். ஊர் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வார்கள். அதுவே தொடர்ந்து லீவாக இருந்தால் வேறு எங்கையாவது சுற்றி பார்க்க செல்லலாம் என்று நினைப்பார்கள். வெளியே எங்கையாவது சுற்றி பார்க்க வேண்டும் என்றால் கோவில் பெயரை போட்டு மொபைலில் சர்ச் செய்து பார்ப்போம். அப்படி சர்ச் செய்து பார்த்து அந்த கோவில் எங்கே இருக்கிறது என்று பார்த்து விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் திருவீழிமிழலை கோவிலின் சிறப்புகள் மற்றும் கோவில் நடக்கும் நேரம் போன்றவற்றை அறிந்து கொள்வோம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் ஆனது காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். அதன் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலானது திறந்திருக்கும். இந்த கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் தினமும் நடைபெறும்.
Thiruveezhimizhalai Temple Location:
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து மற்றும் இரயில் மூலமாக செல்லலாம். நீங்கள் எந்த வாகனத்தில் வந்தாலும் கும்பகோணம் வர வேண்டும், அதன் பிறகு இங்கிருந்து நாச்சியார் கோவிலுக்குச் செல்லலாம். நாச்சியார் கோவிலில் இருந்து, எரவாஞ்சேரி செல்லக்கூடிய வழியில் திருவீழிமிழலை வீழிநாதர் கோவில் அமைந்துள்ளது.
திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 4 கி.மீ., ஆட்டோவில் செல்லலாம்.
Thiruveezhimizhalai Temple Address:
தமிழ் நாடு மயிலாடுதுறை – திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
Thiruveezhimizhalai Temple in Tamil:
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலானது ஏழு நிலைகளை கொண்ட ராஜ கோபுரத்துடன் 3 பிரகாரங்களை கொண்ட கோவிலாக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது.
இந்த கோவிலில் மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் உள்ளது. இந்த தளத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஆறுமுகன், பாலகணபதி, கஜலட்சுமி, நடராஜப்பெருமான், பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீ மயூர நாதர், ஸ்ரீ காசி விசுவநாதர் என்ற பல்வேறு சன்னதிகள் இங்கு அமைந்துள்ளது.
கோவில் கருவறையில் வீழிநாதர் சிவலிங்கத திருமேனிக்கு பின்புறச்சுவரில் திருமணகோலத்தில் காட்சியளிக்கும். சன்னதியின் முன்புறத்தில் அர்த்த மண்டபத்தில் ஒரு தூணும், வெளிப்புறத்தில் மகா மண்டபத்தில் ஒரு தூணும் அமைந்துள்ளது.
இந்த தளத்திற்கு செல்வதால் கிடைக்கும் பலன்கள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இந்த தளத்திற்கு சென்று வரலாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் அலங்காரம் மற்றும் பூஜை நேரம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |