வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருவிளக்கே திருவிளக்கே பாடல் வரிகள் | Thiruvilakke Thiruvilakke Lyrics in Tamil..!

Updated On: June 27, 2025 6:32 PM
Follow Us:
thiruvilakke thiruvilakke lyrics in tamil
---Advertisement---
Advertisement

திருவிளக்கே திருவிளக்கே பாடல் வரிகள் | Thiruvilakke Thiruvilakke Lyrics in Tamil..!

பொதுவாக ஒரு வீட்டிற்கு புதிதாக திருமணம் ஆகி ஒரு பெண் முதலில் வந்தால் அந்த பெண்ணின் கையால் முதலில் விளக்கினை தான் ஏற்ற சொல்லுவார்கள். அத்தகைய நாள் முதல் அந்த பெண் தினமும் விளக்கேற்றும் முறையினை பின்பற்றுவாள். அதிலும் குறிப்பாக வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் தவறாமல் வீட்டில் உள்ள பெண்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்வார்கள். ஏனென்றால் இந்த நாளானது மகாலட்சுமிக்கு உரிய நாளாக இருக்கிறது. அதனால் அவருக்குரிய நாட்களின் பூஜை செய்யும் போது நம்முடைய வீட்டில் மகாலட்சுமி வசம் செய்வாள். இவ்வாறு விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் மஹாலஷ்மி அம்சம் பெருகி, செல்வம் மற்றும் பண மழை பொழியும் என்பது ஒரு ஐதீகமாக இருந்து வருகிது. இப்படி விளக்கு ஏற்றி வழிபடும் போது சில பாடல் வரிகளை பாடுவது என்பது ஆன்மீகத்தில் மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஆகவே இன்று திருவிளக்கே திருவிளக்கே பாடல் வரிகளை பாடி கொண்டு பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் ஆனது முழுமையாக கிடைக்கும்.

காமாட்சி அம்மன் விருத்தம் பாடல் வரிகள்

Thiruvilakke Thiruvilakke Lyrics in Tamil:

திருவிளக்கே திருவிளக்கே

தேவி பராசக்தி திருவிளக்கே

தேவியின் வடிவே திருவிளக்கே

தேவியே உனக்கு நமஸ்காரம்

இருளை அகற்றும் திருவிளக்கே

இன்பம் அளிக்கும் திருவிளக்கே

எங்கும் ஒளிதரும் திருவிளக்கே

லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்

மங்கள ஜோதியாம் திருவிளக்கே

மாலையில் ஒளி தரும் திருவிளக்கே .

காலையில் ஒளிதரும் திருவிளக்கே

சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்

திருமகள் வடிவே திருவிளக்கே

பணியும் திருவிளக்கே

தெள்ளிய ஜோதியே திருவிளக்கே

சாரதே உனக்கு நமஸ்காரம்

அஷ்டலக்ஷ்மி வடிவே திருவிளக்கே

ஆனந்த நர்த்தினி திருவிளக்கே

ஆலய பூஷணி திருவிளக்கே

ஆதிபராசக்தி நமஸ்காரம்

பாக்கிய லக்ஷ்மியாம் திருவிளக்கே

பக்தியை அளித்திடும் திருவிளக்கே

பதவியைத் தந்திடும் திருவிளக்கே

பவானி உனக்கு நமஸ்காரம்

ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே

ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே

அழகை அளிக்கும் திருவிளக்கே

அம்மா உனக்கு நமஸ்காரம்

சௌந்தர்ய ரூபிணி திருவிளக்கே

சந்தான பலம்தரும் திருவிளக்கே

சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே

சக்தியே உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now